ஹீரோவாகும் இசையமைப்பாளர்கள் வரிசையில் இதோ இன்னொருவர்!
கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சரண் சண்முகம் மேற்கொள்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் அவர்களிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது.

