சினி நிகழ்வுகள்

‘சக்ரா’ சினிமா விமர்சனம்

ஏற்கெனவே ஒருசில படங்களில் போலீஸாக நடித்து கம்பீரம் காட்டிய விஷால், ராணுவ அதிகாரியாக நடித்து கெத்து காட்டியிருக்கும் படம்.

பரபரப்பான சென்னையில் அன்றைய தினம் பல வீடுகளில் நகை பணம் என கொள்ளையடிக்கப்பட, போலீஸ் உயரதிகாரியான ஷ்ரத்தா ஸ்ரீநாத் தலைமையில் போலீஸ் களமிறங்குகிறது. கொள்ளைச் சம்பவத்தில், ராணுவ அதிகாரியான விஷால் பொக்கிஷமாகப் பாதுகாக்கிற, தன் அப்பாவின் ராணுவ சேவைக்கு கிடைத்த பதக்கமான ‘சக்ரா’வும் பறிபோக, அவரும் குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸுடன் கை கோர்க்கிறார்.

பிடிபடுகிற குற்றவாளிகளின் பின்னணி அதிர வைக்கிறது. குற்றவாளி யார் என்பது அதிர்ச்சி தருகிறது. டிஜுடல் இந்தியா’வில் ஸ்மார்ட் போன்களால் மக்களுக்கு எப்படியெல்லாம் ஆபத்துகள் வரலாம் என்பதை விவரிக்கிற விறுவிறுப்பான திரைக்கதைக்காக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தனை கட்டிப் பிடித்துப் பாராட்டலாம்!

விஷால் கஞ்சி போட்டது போல் நடக்கிறார், சண்டைக் காட்சிகளில் பறக்கிறார். வசன உச்சரிப்பில் வெடிக்கிறார். வெல்டன் விஷால்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸாக வருகிற காட்சியெல்லாம் வேகம் வேகம் வேகம்.

தனது செஸ் மூளையை சதிச்செயல்களுக்குப் பயன்படுத்துபவராக ரெஜினா கசான்ட்ரா. அந்த தெனாவட்டுப் பார்வை செம சூடு!

ரோபோ சங்கர் இருக்கிறார்; கதையில் காமெடிதான் இல்லை.

படத்தில் கே.ஆர். விஜயாவும் இருக்கிறார். அவர் நடித்து அசத்த ஒருசில காட்சிகளும் இருக்கிறது!

பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா வெறித்தனம் காட்ட சீன்களில் சீற்றம்!

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு உழைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு!

எடிட்டரின் கத்தரி செம ஷார்ப்பாக இருக்க வேண்டும். காட்சிகள் புலிப்பாய்ச்சல்!

சக்ரா – விறுவிறுப்பான கிரைம் நாவல்!