வழக்கு, விசாரணை, இடைக்காலத் தடை… அனைத்தும் தகர்த்து எதிர்பார்த்தபடி ரிலீஸாகும் ‘சக்ரா.’ ‘விஷால் ரசிகர்கள் உற்சாகம்!
விஷால் ஹீரோவாக நடித்து, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் ‘சக்ரா.’
இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி, பிப்ரவரி 19-ம் தேதி இந்த படம் வெளியாக இருந்த நிலையில்,‘சக்ரா’ படத்தின் கதையை இயக்குநர் ஆனந்தன் ஏற்கனவே தங்களிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதித்தது. அதையடுத்து, விஷால் தரப்பிலிருந்து, படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது வாதிடப்பட்டது.
அதையடுத்து, படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடித்தால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஏற்று, படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதையடுத்து படம் நாளை எதிர்பார்த்தபடி வெளியாவதால் விஷால் தரப்பும், விஷால் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர்!
