மலையாளத்தில் வெளியான, ‘சினிமா கம்பெனி’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்த ஸ்ருதி ஹரிஹரன், ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். பின்னர் கன்னடப் படங்களிலும், சில இணையத் தொடர்களிலும் (Web Series) நடித்து வந்தார். அந்த வரிசையில் அவர் இப்போது நடித்திருக்கும் இணையத் தொடர் ‘வதம்.’

MX Player தளத்தில், 10 எபிசோடுகளாக 12.2. 2021 முதல் இலவசமாக பார்க்க கிடைக்கிறது இந்த இணையத் தொடர்.

அந்த தொடரின் இயக்குநர், நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 12. 2. 2021 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, தொடரிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக இரண்டு எபிசோடுகள் திரையிடப்பட்டன.

நேர்மையாக செயல்படுவதற்கு உரிய மதிப்பு கிடைக்காத விரக்தியில், தான் பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸ் வேலையை விட்டு விலக முடிவெடுக்கிறார் சக்தி பாண்டியன். அந்த நேரத்தில், பிரபல நபர் ஒருவர் குரூரமாக கொலை செய்யப்பட்ட பரபரப்பான வழக்கை விசாரிக்கிற பொறுப்பு கைக்கு வந்து சேர்கிறது.

அந்த பணியை தான் விரும்பாவிட்டாலும் தனது அப்பாவின் ஊக்குவிப்பு காரணமாக களத்தில் இறங்குகிறார். பொறுப்பை ஏற்றுக் கொண்டதுமே அவரை செயல்பட விடாமல் முடக்குவதற்கான முயற்சிகளில் எதிரிகள் ஈடுபடுகிறார்கள். அதையெல்லாம் முறியடித்து, கொலைக்கான பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய அந்த சவாலான பணியை எப்படி முடிக்கிறார், கொலைக்கு காரணமானவர்களை எப்படி ‘வதம்’ செய்கிறார் என்பதே திரைக்கதை…

சக்தி பாண்டியனாக ஸ்ருதி ஹரிஹரன். அவரது நெகுநெகு உயரம் போலீஸ் கதாபாத்திரத்துக்கு பொருத்தம். கம்பீரமாக நடப்பது, புயல் வேகத்தில் எதிரிகளோடு மோதுவது என அவர் வருகிற காட்சிகள் அதிரடி, சரவெடி!

அஸ்வதி வாரியர், செம்மலர் அன்னம், பிரிதிக்ஷா பிரேம்குமார் மூவரும் பெண் போலீஸாக,கொலை விசாரணையில் ஸ்ருதி ஹரிஹரனுக்கு பக்கபலமாக வருகிறார்கள். மூவரின் நடிப்புப் பங்களிப்பும் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. மூவரில் பிரிதிக்ஷா திருநங்கை என்பது ஹைலைட் செய்தி!

பரபர விறுவிறு கிரைம் திரில்லர் அனுபவம் தருகிற வதம் தொடரை இயக்கியிருக்கும் வெங்கடேஷ் பாபு பத்திரிகையாளர்களிடம், ”பெண்களின் மன வலிமை, உடல் வலிமை ரெண்டையும் மதிக்கிற விதமான கதாபாத்திரங்களை அமைச்சிருக்கேன். ஸ்ருதி ஹரிஹரன் எதிர்பார்த்ததை விட சிறப்பா நடிச்சிருக்காங்க. ஏத்துக்கிட்ட கதாபாத்திரத்துக்காக உடம்பை கஷ்டப்படுத்தி கடுமையா உழைச்சாங்க. சக்தி பாண்டியன்கிற அவங்க கேரக்டருக்கு சக்தி பாய்ச்சிருக்காங்க.

ஸ்ருதியோட நடிச்ச மற்ற நடிகர் நடிகைகளும், இசையமைப்பாளர் உட்பட மற்ற டெக்னிஷியன்களும் இந்த புராஜெக்ட் சிறப்பா வரணும்னு ரொம்பவே அக்கறை எடுத்துக்கிட்டாங்க” என்று படக்குழுவினரை பாராட்டிப் பேசினார்.

ஸ்ருதி ஹரிஹரன், ”இதுவரை நான் நடிச்சதுலேருந்து தனியா தெரியுற மாதிரி நல்லதா ஒரு கேரக்டர் பண்ணணும்னு யோசிச்சு காத்திருந்தப்போ, வெங்கடேஷ் பாபு சார் கொடுத்த என்னோட எதிர்பார்ப்புக்கு ஏத்த வாய்ப்பு இது. பெண்களோட ‘சக்தி’யை பெருமைப் படுத்துற மாதிரியான, கேரக்டர் பெயரிலேயே சக்தி இருக்கிற மாதிரியான கதாபாத்திரம். அவர் கதை சொன்னவிதமே படு வித்தியாசமா, எனர்ஜியா இருந்துச்சு. விரும்பி ஏத்துக்கிட்டு நடிச்சேன். போலீஸா நடிச்சது பெருமையா இருக்கு!” என்றார்.

பெண் போலீஸ்களில் ஒருவராக நடித்திருக்கிற பிரதிக்ஷா, ”நான் ஒரு திருநங்கை. பொதுவா பெரும்பாலான இயக்குநர்கள் திருநங்கைகளுக்கு மதிப்பு கொடுத்து நடிக்க வைக்கிறதில்லை. திருநங்கையா நடிக்க வேண்டிய கதாபாத்திரங்களுக்கு கூட எங்களை கூப்பிடுறதில்லை. அது எங்களுக்கெல்லாம் வலி தரக்கூடிய விஷயமா இருக்கு.
அந்த வலிக்கு ஆறுதலா, இந்த வெப் சீரிஸ்ல என்னை திருநங்கையா நினைக்காம, ஒரு பெண்ணாவே மதிச்சு, எனக்கு பெண் போலீஸ் கேரக்டர் கொடுத்து கெளரவிச்சிருக்கார் இயக்குநர். அவருக்கு நன்றி!” என நெகிழ்ந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் உள்ளிட்டோரும் வதம் இணையத் தொடரில் தங்களது பங்களிப்பு, அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/VATHAM.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/VATHAM-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்https://www.youtube.com/watch?v=mLwfo50DA38&feature=youtu.be   மலையாளத்தில் வெளியான, 'சினிமா கம்பெனி' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்த ஸ்ருதி ஹரிஹரன், 'நெருங்கி வா முத்தமிடாதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். பின்னர் கன்னடப் படங்களிலும், சில இணையத் தொடர்களிலும் (Web Series) நடித்து வந்தார். அந்த வரிசையில் அவர் இப்போது நடித்திருக்கும் இணையத் தொடர் 'வதம்.' MX Player தளத்தில், 10 எபிசோடுகளாக 12.2. 2021 முதல் இலவசமாக பார்க்க கிடைக்கிறது இந்த இணையத்...