தான் நடித்து ஹிட்டடித்த ‘ஏ 1’ ஹிட் படத்தை இயக்கிய ஜான்சனுடன் சந்தானம் மீண்டும் கூட்டணி அமைத்து உருவான படம்.

கானா பாடகரான ஜெயராஜ், சென்னை பாரிஸில் வசிப்பவர். தலைப்பு வெரி வெரி சிம்பிள்.

ஹீரோ ஜெயராஜ், ஒரு பெண்ணுக்கு ரூட் விட்டு அது அப்பீட்டு ஆனபிறகு இன்னொரு பெண்ணுக்கு பிராக்கெட் போட்டு அது செட்டாவுது. ஆனா, ஜெயராஜோட அப்பாவால அந்த காதலுக்கு எதிர்ப்பு. அந்த பெண்ணோட அப்பாவும் காதலுக்கு செவப்பு சிக்னல் போடுறாரு. அப்பால, அந்த காதல் ஜோடிங்க லைப்ல சேருறாங்களா இல்லையானு சொல்லி முடிக்கிறதுதான் கதை

!

சந்தானத்துக்கு பழகிய ஹியூமர் ரூட்ல ஒரு ஸ்டோரி. மனுஷன் புகுந்து வெளாடுறாரு. கலக்கலா டான்ஸும் போடுறாரு. கூடவே மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை, வினோத்துன்னு காமெடி கூட்டணி வேற. சிரிப்பு சிதறலுக்குப் பஞ்சமில்லை!

ஹீரோயின் அனைகா சோதி. அழகா, இளமையா இருக்குற அந்த பாப்பா சிரிச்சா அதைவிட அழகாருக்கு. மத்தபடி நடிப்பு பத்தி சொல்லிக்க பெருசா ஓண்ணும் இல்லை.

சந்தானத்துக்கு அப்பாவா வர்ற மாருதி பிருத்விராஜ் நடிப்பு படத்துக்கு செம சப்போர்ட்டு. இன்டர்வலுக்குப் பிறகு படத்தை தூக்கிச் சுமக்குறது அவருதான். ‘ரெண்டு வீட்டுக்கும்’ இடையில மாட்டிக்கிட்டு ரெண்டுங்கெட்டானா அவரு முழிக்கிறதெல்லாம் லகலக சமாச்சாரம்!

 

இசை சந்தோஷ் நாராயணன். மனுசனுக்கு கானா பாட்டு போடுறதுன்னா குஷி. ‘புளி மாங்கா புளிப்’, ‘சம்சா சூடாருக்கு, கடிச்சுப் பாத்தா ஹாடாருக்கு’ன்னு மனுசன் படம் முழுக்க போட்டு பொளந்திருக்காரு.

ஒளிப்பதிவு கலக்கலா கலர்ஃபுல்லா இருக்கு.

‘A1’ படத்துல ஹீரோயினோட அப்பாவுக்கு சிலபல சின்னவீடுங்க இருக்கும். அதேபோல நாட்டாமை படத்துல செந்திலுக்கு ஏகப்பட்ட செட்டப் இருக்கும், அவரோட மகன் கவுண்டமணியோட மனசுக்கு பிடிக்கிற பொண்ணுங்கள, அவருக்கு தங்கச்சின்னு சொல்லி செந்தில் ஷாக் கொடுப்பார். அந்த கலாட்டாவையெல்லாம் பிச்சுப் போட்ட கொத்து பரோட்டாவா இருக்குற திரைக்கதை மனசு விட்டு சிரிக்க உதவுது! தியேட்டருக்கு நம்பி போகலாம் மக்கா!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/பாரிஸ்1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/பாரிஸ்1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தான் நடித்து ஹிட்டடித்த 'ஏ 1' ஹிட் படத்தை இயக்கிய ஜான்சனுடன் சந்தானம் மீண்டும் கூட்டணி அமைத்து உருவான படம். கானா பாடகரான ஜெயராஜ், சென்னை பாரிஸில் வசிப்பவர். தலைப்பு வெரி வெரி சிம்பிள். ஹீரோ ஜெயராஜ், ஒரு பெண்ணுக்கு ரூட் விட்டு அது அப்பீட்டு ஆனபிறகு இன்னொரு பெண்ணுக்கு பிராக்கெட் போட்டு அது செட்டாவுது. ஆனா, ஜெயராஜோட அப்பாவால அந்த காதலுக்கு எதிர்ப்பு. அந்த பெண்ணோட அப்பாவும் காதலுக்கு செவப்பு...