அறிந்தும் அறியாலும், பட்டியல் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் புன்னகைப் பூ கீதா. அவர் தயாரித்திருக்கும் படம் இது.

சிலபல காரணங்களால் ஆண்களைப் பிடிக்காது போய், தனக்கு வாழ்க்கையில் ஆண் துணையே தேவையில்லை என்ற முடிவில் இருக்கிற பெண் தீப்தி சதி. அவளை துரத்தித் துரத்திக் காதலிக்கும் இளைஞன் தினேஷ். தன்னை தீவிரமாக காதலிக்கும் தினேஷை கழட்டிவிட, படு விபரீதமான முடிவெடுக்கிறாள் தீப்தி.

அந்த முடிவு என்ன என்பதும், அதன் விளைவுகள் என்னென்ன என்பதுமே கதை.

முரட்டு சிங்கிள், 90 கிட்ஸ் என இன்றைய காலத்தில் புழங்கும் சங்கதிகளைக் கோர்த்து, ‘அந்த’ மாதிரியான காட்சிகளைக் கலந்துகட்டிய இளைய தலைமுறைக்கு ஏற்ற ஹாட்டான விருந்து படைத்து, கூடவே ஆணோ பெண்ணோ வாழ்க்கைக்கு துணை தேவை என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கோபி.

தினேஷ் அலட்டிக் கொள்ளாமல் நடிக்க முயற்சிப்பதே அலட்டிக் கொள்வது போலிருக்கும். இதிலும் அப்படியே. ஆனாலும் ரசிக்க வைக்கிறார்.

நாயகி தீப்தி சதி இளமையாக, செழுமையாக இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. ஒரு பாடலில் அவர் ஆடும் டான்ஸ் கிழி… கிழி… கிழி!

தினேஷுக்கு நண்பர்களாக வருகிற ‘ஆதித்யா’ கதிர் & டீம் அடிக்கிற லூட்டியில் அசைவ மசாலா தூக்கல்!

மொட்டை ராஜேந்திரன் வருகிற காட்சிகள் கலகலப்பு!

ஆணுடன் உடல் ரீதியான உறவு இல்லாமல் கரு உருவாக்கம் என்பது கதையில் சீரியஸ் எபிசோடு என்றால், உயிரணுவை மாற்றுவதால் நிகழும் சுவாரஸ்ய திருப்பம் சிரிப்ஸ் எடிசோடு…

ரசிக்கும்படி பாடல்களையும், பொருந்தும்படி பின்னணி இசையையும் கொடுத்துள்ளார் ஹித்தேஷ் மஞ்சுநாத். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.

கே.ஆனந்தராஜ் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் நிகழும் காட்சிகள் கலர்ஃபுல்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/naanum-single-thaan-movie-review.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/naanum-single-thaan-movie-review-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்அறிந்தும் அறியாலும், பட்டியல் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் புன்னகைப் பூ கீதா. அவர் தயாரித்திருக்கும் படம் இது. சிலபல காரணங்களால் ஆண்களைப் பிடிக்காது போய், தனக்கு வாழ்க்கையில் ஆண் துணையே தேவையில்லை என்ற முடிவில் இருக்கிற பெண் தீப்தி சதி. அவளை துரத்தித் துரத்திக் காதலிக்கும் இளைஞன் தினேஷ். தன்னை தீவிரமாக காதலிக்கும் தினேஷை கழட்டிவிட, படு விபரீதமான முடிவெடுக்கிறாள் தீப்தி. அந்த முடிவு என்ன என்பதும், அதன் விளைவுகள் என்னென்ன...