தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கவனிக்கத்தக்க இடத்தை தக்க வைத்திருக்கிற நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் நான்கு (குறும்) படங்கள்.

சற்றே எக்குத்தப்பான நான்கு காதல் கதைகளின் காம்போ பேக்காக, ‘ஆந்தாலஜி’யாக வந்துள்ள படம் ‘குட்டி ஸ்டோரி.’

1. காதல் கதைக் களத்தில் புகுந்து விளையாடுகிற கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி, கதை நாயகனாகவும் நடித்திருக்கிற படம் ‘எதிர்பாரா முத்தம். அவரே நடித்துமிருக்கிறார்.

கௌதம் மேனனுக்கு பள்ளிப் பருவத்தில் உருவான காதல் கைகூடாத நிலையில், அமலாபாலுடன் நெருங்கிய நட்பு வளர்க்கிறார். அதில் காதல் இல்லை என கெளதம் மேனன் சொன்னாலும் ஒரு தருணத்தில் அமலா பாலுக்கு எதிர்பாராத தருணத்தில் முத்தம் தருகிறார். அதன் விளைவுகள் என்னென்ன என்பதே கதை.

கௌதம் மேனனின் இளவயது கதாபாத்திரத்தில் வருகிற வினோத், கௌதம் மேனனின் சாயலிலேயே இருப்பது தனித்துவம்.

2. விஜய் இயக்கியிருக்கும் படம் ‘அவனும் நானும்.’

காதலன் அமிர்தாஷ் பிரதானுடன் தானே விரும்பி நெருக்கமாக இருக்கிறார் மேகா ஆகாஷ். அதன் விளைவாக கரு உருவாகிவிடுகிறது. காதலனுக்கு அந்த அதிர்ச்சியான விஷயத்தை தெரிவிக்கிறாள். அத்தோடு காதலனின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது. அதையடுத்து அவள் சந்திக்கும் பிரச்னைகளே கதை.
லாஜிக் பற்றி துளியும் யோசிக்காத காட்சிகளின் தொகுப்பாக இருந்தாலும், குழந்தை தன் அம்மாவிடம் ஏதோவொரு விதத்தில் வந்து சேர்கிற காட்சி நெகிழ்ச்சி!

3. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் ‘லோகம்.’

அனிமேஷன் கேம் மூலம் ஒரு காதல் கதை. முயற்சி. நிச்சயமாய் வித்தியாசமான முயற்சி. பார்ப்பது பொம்மைப் படம் என்ற உணர்வைத் தந்தாலும், சொல்லியிருக்கிற கதையும், அதில் நடித்திருக்கிற வருண், சங்கீதா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பும் கவர்கிறது. பிரேம்ஜி அமரனின் இசை பக்கா!

4. நலன் குமாரசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆடல்-பாடல்.’ ‘சூதுகவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கியவர் இவர்.

தனது கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தபின், தனக்கும் ஒரு ஆணுடன் முன்பு அப்படியொரு தொடர்பு இருந்த விவரத்தை கணவனிடம் துணிச்சலாக சொல்கிறாள். அதன்பின் அந்த கணவனின் மனநிலை என்னவாகிறது என்பதே கதை.

கதையும் திரைக்கதையின் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும், விஜய் சேதுபதி – அருவி’ அதிதி பாலன் நடிப்பும் அசத்துகிறது. நான்கு படங்களில் அதிகம் ஈர்ப்பது இந்த படமே!

நான்கு படங்களுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள், வேறு வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள்… அத்தனைப் பேரின் உழைப்பும் கச்சிதம்!

வித்தியாசமான அனுபவத்துக்காக படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு குட்டி ஸ்டோரி – கெட்டி ஸ்டோரி!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/kuttist.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/kuttist-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கவனிக்கத்தக்க இடத்தை தக்க வைத்திருக்கிற நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் நான்கு (குறும்) படங்கள். சற்றே எக்குத்தப்பான நான்கு காதல் கதைகளின் காம்போ பேக்காக, 'ஆந்தாலஜி'யாக வந்துள்ள படம் 'குட்டி ஸ்டோரி.' 1. காதல் கதைக் களத்தில் புகுந்து விளையாடுகிற கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி, கதை நாயகனாகவும் நடித்திருக்கிற படம் 'எதிர்பாரா முத்தம். அவரே நடித்துமிருக்கிறார். கௌதம் மேனனுக்கு பள்ளிப் பருவத்தில் உருவான காதல் கைகூடாத நிலையில்,...