விஜயகாந்த் நலம் பெற வேண்டும்! இயக்குநர்
தமிழ் திரையுலகில்
அனைவராலும்
“புரட்சிக்கலைஞர்” என்று
அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன்.
திரைத்துறைக்கு வருபவர்கள் யாரையாவது ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் சென்னைக்கு புறப்படுவார்கள். “சிவப்பு மல்லி” என்கிற ஒரு நெருப்பான படைப்பை பார்த்தும் அதில் நாயகனாக நடித்த
திரு. விஜயகாந்த் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டும்தான் நான் திரைத்துறைக்கு வந்தேன்.
தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டவர்
திரு. விஜயகாந்த் அவர்கள். எல்லோரிடமும் வித்தியாசமின்றி பழகும் திரு. விஜயகாந்த் அவர்கள் இந்நோய் தொற்றிலிருந்து
விரைவில் மீண்டு வந்து சமூக பணியாற்றிட இயற்கையையும் இறையையும் வேண்டுகிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
24:09:2020
சென்னை.