விஜயகாந்திற்காக ராதாரவி வேண்டல்
எனது நீண்ட கால நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்புவார். இந்த தருணத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் நாம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. தயவு செய்து சமூகப் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.
நன்றி
நடிகர் ராதாரவி
25:09:2020