சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்

முதல்வருக்கு டி.ஆர் கோரிக்கை


குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள்!!!

கொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் ,நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர் ..ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளார்கள் ..இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா தலமென்பதால் அதன் மூலம் வரும் வருமானத்தையும் அரசு இழந்து வருகிறது .ஆகவே துயரத்தின் உச்சத்தில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் சந்தோசப்படும் விதமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை தொடங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.. கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
மாண்புமிகு தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் போது வியாபாரிகள் அனைவரும் விளக்கேற்றி தங்களுடைய வாழ்விலும் விளக்கேற்றுங்கள் என்று முதல்வரின் கவன ஈர்ப்புக்கு கொண்டு செல்ல வேண்டுமென PT செல்வகுமார் கூறியிருந்தார்..
அந்த கருத்தையும் ஆதரிக்கிறேன் 🙏என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *