சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆகிவிட்டது என அவரை நினைத்து உணர்ச்சிபூர்வமான வரிகளை வெளிபடுத்திய நடிகை ரியா சக்ரவர்த்தி.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆகிவிட்டது என அவரை நினைத்து உணர்ச்சிபூர்வமான வரிகளை வெளிபடுத்திய நடிகை ரியா சக்ரவர்த்தி.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் . இந்த செய்தி திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்நிலையில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் சிங் உடன் அவர் இருக்கும் புகைபடம் ஒன்றை வெளியிட்டு தனது சோகத்தை வரிகளோடு வெளிபடுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நீங்கள் தான் அன்பின் சக்தியை உணர வைத்தீர்கள் . வாழ்க்கையின் அர்த்ததை நீங்கள் தான் புரிய வைத்தீர்கள், ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் இனி இங்கு இல்லாததால் நான் ஒருபோதும் இணங்க மாட்டேன்.
நீங்கள் இப்போது மிகவும் அமைதியான இடத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். சந்திரன், நட்சத்திரங்கள், விண்மீன்கள் “மிகப் பெரிய இயற்பியலாளரான உங்களை வரவேற்கின்றன.
உங்களுக்காக நான் காத்திருத்திருக்கிறேன் நட்சத்திரங்கள் உங்களை மீண்டும் என்னிடம் அழைத்து வர நான் ஆசைப்படுகிறேன்
நீங்கள் ஒரு நல்ல மனிதர் , உலகம் கண்ட மிகப்பெரிய அதிசயம் நீங்கள்.
நீங்கள் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் நேசித்தீர்கள், இப்போது நம் காதல் உண்மையில் அதிவேகமானது என்பதை நீங்கள் எனக்குக் காட்டியுள்ளீர்கள்.