சினிமா செய்திகள்நடிகர்கள்

‘நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்’ – ட்விட்டரில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இயக்குநரும், நடிகருமான சேரன் புகழ் பெற்றார் என்று சிலர் நினைக்கும் நேரத்தில் கண்முன் வந்து செல்கின்றது பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள். 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோதும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிச்சயம் இவருக்கும் ஒரு இடம் உண்டு. தமிழ் சினிமாவில் 70 மட்டும் 80-களுக்கு பிறகு நல்ல குடும்பம் சார்ந்த கதைகளை கொடுத்ததில் அவருக்கு இணை அவரே. ‘தவமாய் தவமிருந்த பாண்டவர் பூமி அதற்கு சாட்சி’.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் ட்விட்டர் தளத்தில் சேரன் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான பல சிறந்த புகைப்படங்களை பார்க்கும் மக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட தவமாய் தவமிருந்து படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள சேரன், “நேற்று தந்தையர் தினம்.. நிறைய பேர் தவமாய் தவமிருந்து பார்த்தும் நினைத்தும் என்னோடு பகிர்ந்து கொண்டீர்கள்.. மிக்க நன்றி. அதன் காரணம் என்னவெனில் நீங்கள் அனவரும் உங்கள் தந்தையை நேசிக்கிறீர்கள், பாதுகாக்க நினைக்கிறீர்கள், நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பேசப்படுவது இன்னும் ரசிகர்கள் நல்ல திரைப்படங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என காட்டுகிறது. நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள் அடுத்த பயணத்திற்கு. வழக்கம் போல என்னைமட்டும் நம்பியே நான் பயணிக்க வேண்டிய கட்டாயம். பயணிப்பேன். நன்றி”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *