• கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது.

இப்

யாரிடமும் தொழில் கற்றுக் கொள்ளாத புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்?

இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

அம்மா வேடத்தில் நடிக்க காரணம்?

கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை.

ஓடிடியில் இப்படம் வெளியாவதால் வருத்தமில்லையா?>

நிச்சயம் வருத்தம்தாம். தியேட்டர்களில் ரசிகர்கள் முன்னிலையில் விழாக் கோலத்துடன் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு தனி மவுசு, ஆனால் இது போன்ற லோ பட்ஜெட் படங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரிலீஸ் ஆவதே நல்லது -ன்னு புரொடியூசர் நம்பறார். இதில் நான் சொல்ல ஒன்றுமில்லை

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/Penguin-Movie-2.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/Penguin-Movie-2-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது. இப் யாரிடமும் தொழில் கற்றுக் கொள்ளாத புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்? இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி...