சினி நிகழ்வுகள்நடிகர்கள்

நடிகர் ஆரியன் ஷியாம் தன் தாத்தாவிற்கு செய்த மரியாதை


இந்தியன் வங்கியின் ஸ்தாபகரான ஶ்ரீ V கிருஷ்ணஸ்வாமியின் பிறந்த
நாளான இன்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அவரது கொள்ளுப்பேரன் ஆரியன் ஷியாம் மாலை அணிவித்து அவரது ஆசிகளை வேண்டினார்.

வழக்கறிஞரான ஶ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். கப்பலோட்டிய தமிழரான வ உ சி சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவியது போல கிருஸ்ணசாமி ஆங்கிலேயரின் அர்புத்நாட் வங்கிக்கு எதிராக இந்தியர்களுக்கான சுதேசி வங்கியாக இந்தியன் வங்கியை நிறுவினார்.

இந்தியன் வங்கியும் இன்று அவரது நினைவைப் போற்றி அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி கவுரவித்தள்ளது.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தினுள் செனட் மண்டபத்திற்கு வெளியே கடற்கரையை நோக்கி நிறுவப்பட்ட முதல் இந்தியரின் சிலை என்ற பெருமை பழம் பெறும் கல்வியாளர் ஶ்ரீ V. கிருஷ்ணஸ்வாமி அவர்களையே சாறும்.

ஆரியன் ஷியாமின் மனைவி திரு AVM சரவணன் அவர்களின் பேத்தியாவார். ஷியாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘அந்த நாள்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் கன்னட ரீமேக்கான ‘பரியேறும் பெருமாள்’ படத்திலும் ஷியாம் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *