ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் காலமானார்
தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார்.
இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து நிழல்கள் , காதல் ஓவியம், புதுமைப் பெண், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே என பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றார்.