டுலெட்’ படத்தின் இயக்குநரான செழியனுக்கு அகில இந்திய அளவிலான முக்கிய கௌரவம் கிடைத்துள்ளது
டுலெட்’ படத்தின் இயக்குநரான செழியனுக்கு அகில இந்திய அளவிலான முக்கிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சினிமட்டோகிராபர்ஸ் அமைப்பு, உலக அளவில் பெயர்பெற்றது. ஒளிப்பதிவுத் துறையில் சாதனை படைப்பவர்களையும் ‘ட்ரெண்ட் செட்டர்’களையும் அதில் உறுப்பினராக இணைத்து கௌரவம் செய்வார்கள். அதேபோல் இண்டியன் சொசைட்டி ஆஃப் சினிமட்டோகிராபர்ஸ் அமைப்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும் பெரும் கௌரவம் என்பதை திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சமூகம் ஆமோதிக்கிறது.