BREAKING டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி.; விதிமுறைகள் இதோ…
வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் மே 31ஆம் தேதி அமலில் இருக்கும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மே 11 முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.
அதாவது எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையில் பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து பேசினார்.
அப்போது சூட்டிங் அரங்குகள், வீடுகள் ஆகியவற்றின் உள்ளே நடைபெறும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரவேண்டும்.
சின்னத்திரை படப்பிடிப்புகள் தொழிற்சாலைகள் போல அரங்குகளின் உள்ளே பணிகள் நடைபெறக்கூடியவை. இதனால் எவ்வித பாதிப்பும் நேராது.
இதற்கு ஏதாவது நிபந்தனைகளை அரசு விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.
சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் 5000 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
டிவி நிகழ்ச்சிகளும் புத்துயிர் பெறும். வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கும் உற்சாகம் ஏற்படும் என அமைச்சரிடம் பெப்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று மே 21ஆம் சின்னத்திரை சூட்டிங்க்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.
இது தொடர்பான விதிமுறைகள் இதோ…
சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது.
தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது
பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்
படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்
சின்னத்திரை சூட்டிங் தொடர்பாக தமிழக அரசின் அனுமதிக்கு நடிகை குஷ்பூ தமிழக முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜீக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
TN Govt grants permission to resume TV shooting at indoor