ஹாலிவுட் படங்களில் make up பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.
வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர். நான் சின்னப் பெண்ணா இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.
2-வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். இப்போ திடீர்னு இப்படி கமல்ஹாசன் பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவிச்சி வாராய்ங்க