சினிமா செய்திகள்நடிகர்கள்

கொரோனா ஊரடங்கில் நடிகர் ஆரவ் – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ரெண்டு பேரும் ஆன் லைனில் கலந்துரையாடினார்கள்

கொரோனா ஊரடங்கில் நடிகர் ஆரவ் – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ரெண்டு பேரும் ஆன் லைனில் கலந்துரையாடினார்கள். அப்போ இந்த மிக்சர் சாப்பிடும் கேரக்டர் உருவாக்கியதன் பின்னணியைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

“முதலில் அந்தக் கேரக்டருக்கு அவரை நடிக்க வைக்கும் எண்ணமே இல்லை. வேறொருவரைத் தான் முடிவு பண்ணினோம். காமெடிக் காட்சியை எழுதி முடித்தவுடன், பார்க்கவரும் பெண்ணின் தற்போதைய அப்பா ஒருவர் வேண்டும் என்று அந்தச் சமயத்தில் தோன்றியது. இங்கிருந்து கூட்டிக் கொண்டு போன கம்பெனி நடிகர்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருப்பவர்கள் யாருமே செட் ஆகவில்லை. கொஞ்சம் வெள்ளையாக இருக்க வேண்டும்யா என்றேன்.

படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிபவர் இவர். ‘அவரைக் கூட்டிக்கொண்டு வா’ என்றேன். அவரோ உடனே பயந்துபோய் என்ன சார் ஆச்சு என்று பயந்துகொண்டே வந்தார். சும்மா உட்காருய்யா என்று சொன்னேன். சும்மா உட்கார்ந்திருந்தால் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்று கவுண்டமணியும் செந்திலும் சொன்னார்கள். அப்படியா, உடனே கையில் தட்டு கொடு.. போய் மிக்சர் ஏதாவது வாங்கிட்டு வாங்கடா என்று சொன்னேன்.

‘மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது’ என்றேன். என்ன கேட்டாலும் மிக்சர் சாப்பிடு, உடனே அவர்கள் ஏதாவது சொல்லிக் கொள்வார்கள் என்று சொன்னேன். டயலாக் அவருக்கு வராது என்பதால் அவருக்கு மிக்சர் கொடுத்தேன். அதைப் பார்த்தால் இப்போது மிக்சர் மாமா என்று பரவிவிட்டது. அந்த வசனங்கள் எல்லாம் கவுண்டமணியால்தான் இன்னும் ஃபேமஸ் ஆச்சு”.