“நம் கையில் இருக்கிறது இன்பம். அது இருக்கும் வரை நமக்கு அதன் அருமை தெரிவதே இல்லை” என்ற ஒற்றை வரிக் கதையை இனிக்க இனிக்க காதல் கலந்து சொல்லி இருக்கும் படமே ஓ மை கடவுளே..

அஷோக்செல்வனின் மனைவியாகிறார் அவரது தோழியான ரித்திகா. தோழி மனைவியான பின் மனைவியை காதலாக பார்க்க தயங்குகிறார் அஷோக்செல்வன். அது இருவருக்குள் பிரிவை கொண்டு வருகிறது. ஓ மை கடவுளே என அஷோக் புலம்ப கடவுள் மறுபடி ஒரு வாய்ப்பைத் தருகிறார் ஹீரோவிற்கு. அந்த வாய்ப்பு என்னானது என்பதை படு சுவாரசியமான முறையில் படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வத்.

அஷோக்செல்வன் நடிப்பில் துளியும் மிகை இல்லாமல் இருப்பது சிறப்பு. ரித்திகா சிங் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்து படத்தைக் கவனமாக காப்பாற்றி இருக்கிறார். நண்பனாக வரும் ஷாரா போலவே படத்தின் இன்னொரு நாயகியான வாணி போஜன் அட்டகாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். சந்தோஷ் பிரதாப் சற்று நேரமே வந்தாலும் மிக சிறப்பான கேரக்டரை மிகச்சிறப்பான முறையில் நடித்துக் கொடுத்துள்ளார். ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர் எல்லாம் நச் ரகம். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஜய்சேதுபதி தான் படத்தின் ஓ மை கடவுளே..செம்ம.

லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையோடு சேர்த்து பாடல்களையும் ரசிக்க முடிகிறது. கேமராமேன் விது ஐய்யன்னா தன் கேமரா மூலமாக காதலை வழிய விட்டிருக்கிறார். சிறப்பு. படத்தின் ஆர்ட் டிப்பார்ட்மெண்டும் தூள்.

முன்பாதி காதல் ப்ளஸ் கலகலப்பு என்று பயணிக்கும் படம் பின்பாதியில் காதல் ப்ளஸ் காதல் என எமோஷ்னலாக பயணித்து அருமையாக ஈர்க்கிறது. காதலர்கள் மட்டும் அல்லாமல் குடும்பத்தார்களும் பார்த்து ரசிக்கும் படி படத்தை எடுத்துள்ளார்கள். லவ்வர்ஸ் டேவுக்கு ஒரு குடும்ப கொண்டாட்டம் இப்படம்

 

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/IMG_20200212_192728-1024x520.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/IMG_20200212_192728-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்திரைப்படங்கள்  'நம் கையில் இருக்கிறது இன்பம். அது இருக்கும் வரை நமக்கு அதன் அருமை தெரிவதே இல்லை' என்ற ஒற்றை வரிக் கதையை இனிக்க இனிக்க காதல் கலந்து சொல்லி இருக்கும் படமே ஓ மை கடவுளே.. அஷோக்செல்வனின் மனைவியாகிறார் அவரது தோழியான ரித்திகா. தோழி மனைவியான பின் மனைவியை காதலாக பார்க்க தயங்குகிறார் அஷோக்செல்வன். அது இருவருக்குள் பிரிவை கொண்டு வருகிறது. ஓ மை கடவுளே என அஷோக் புலம்ப...