திரை விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி – திரை விமர்சனம்

நடுத்தர குடும்ப வாழ்க்கை
அழகானது என்பதை சொல்வதே இந்த மெட்ராஸ் மேட்னி.

மிடில் கிளாஸ் வாழ்க்கை என்பது அன்றாடம் போராட்டம் நிறைந்தது. எந்தவித சந்தோஷத்திற்கும் , சாகசங்களுக்கும் அங்கே இடமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரபல கதாசிரியர் ஒருவர், அப்படிப்பட்ட நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கை பற்றி ஒரு கதை எழுத முடிவுs செய்கிறார். அதற்காக நடுத்தர குடும்ப மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை சேகரிக்க தொடங்குகிறார். அப்போது, நடுத்தர மக்கள் மீதான தனது பார்வை தவறு என்பதை தெரிந்து கொள்கிறார். இப்படி அவர் சந்தித்ததில் முக்கியமானவர் காளி வெங்கட். அவரது வாழ்க்கை மூலம் கதையாசிரியருக்கு கிடைத்த தெளிவு தான் படம்.

கதையின் நாயகனாக காளி வெங்கட் நடிப்பில் தனது புது எல்லை யை தொட்டு இருக்கிறார்.
கண்ணன் என்ற நடுத்தர குடும்பத்து நாயகனாக மக்கள் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்கிறார்.
கதையாசிரியர் ஜோதி ராமையா கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழுப்படத்தையும் நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் வருகிறார்.
காளி வெங்கட்டின் மகளாக ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக நடிப்பில் ஜொலி க்கிறார்.

காளி வெங்கட்டின் மனைவியாக ஷெல்லி கிஷோர், அந்த கெட்டியான கதாபாத்திரத்தில் பசை போட்டு ஓட்டிக் கொள்கிறார்.
கீதா கைலாசம் முதல் முறையாக சிரித்த முகத்தோடு, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் கலகலப்பூட்டுகிறார்.
காளி வெங்கட்டின் மகனாக கிஷோர், ஐடி நிறுவன அதிகாரியாக அர்ச்சனா, மின்வாரிய அலுவலக அதிகாரியாக சுனில சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா என அனைவரும் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் பள பளக்கிறார்கள்,
எளிமையான மக்களின் யதார்த்த வாழ்க்கையையும், அவர்களது இருப்பிடங்களையும் sஇயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே.
இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரம சுகம்,
எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை நடுத்தர குடும்பம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
-மெட்ராஸ் மேட்னி கொண்டாட்டம்.