பேய் கொட்டு இசை வெளியீட்டு விழா!
இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பேய் கொட்டு’ (Pei Kottu). இப்படத்தில் வெளியீட்டு தேதி இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு ,ஸ்டண்ட் மாஸ்டர்.ஜாக்குவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ் லாவண்யா இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கொட்டு எனும் திரைப்படத்தில் எஸ். லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் இயக்குநர் எஸ். லாவண்யா சுயமாக கற்றுக்கொண்டு கையாண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த பெண் படைப்பாளி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ் லாவண்யா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸர் ,டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே இந்தத் திரைப்படம் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது என்பதும், ஒரு பெண்மணி திரைத்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பற்றி கற்று தேர்ச்சி அடைந்து அதனை தொடர்ந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் நாயும் பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் நல்லதொரு காம்பினேஷனில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படம் காமெடி ஹாரர் கலந்த கதையிது.நல்ல மெசேஜ் உள்ள விறுவிறுப்பான குடும்பத்தோடு பார்க்கும் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் சாரிடம் இயக்குனர் லாவண்யா இப்படத்திற்காக விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் சினிமா நடிகர் நடிகைகளின் பெண்கள்னா Adjustment ஆண்கள்னா Investment ஆகிய முக்கிய கதை கருவை இப்படம் சொல்கிறது.
இயக்குனர் லாவண்யா இசைத்துறையில் எம் ஏ இந்துஸ்தானி இசையை பஞ்சாபில் படித்துள்ளார்.இவர் சினிமாவில் பாடகியாக வர வேண்டுமென ஆசைப்பட்டவர்.முழுத் துறையையும் கற்றுக்கொண்டு 32 துறைகளிலும் சாதனை படைத்துள்ளார்.