மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – திரை விமர்சனம்
‘லவ் யூ’ சொல்வதற்கும் ‘ஐ லவ் யூ’ சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல வந்திருக்கும் படம்.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஹரி பாஸ்கர் சக மாணவி லாஸ்லியா வை ஒருதலையாக விரும்புகிறார். லாஸ்லியாவோ, உன் மேல் எனக்கு காதலே இல்லை என்று தனது சொல்லி விட…லாஸ்லியா பணக்கார வீட்டு பெண்.ஹரி பாஸ்கரோ மிடில் கிளாஸ் ஃபேமிலி. போக்குவரத்துகழகத்தில் வேலை பார்க்கும் அப்பாவின் சொற்ப வருமானமே நாயகனின் குடும்பத்தை தாங்குகிறது.நாலு வருடம் கடந்த நிலையிலும் நாயகன் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்நிலையில் தன் கவனக்குறைவால் குடும்பத்துக்கே அவமானம் தரக்கூடிய ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட நாயகன், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம் என்ற சூழலில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு உடன்படுகிறான். ஆனால் அவன் கூட்டி பெருக்க வேண்டிய பங்களா அவனது ஒருதலைக் காதலியு டையது.
வேறு வழி இல்லை. வேலை பார்த்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காதலி வீட்டில் வேலை செய்கிறான். ஆரம்பத்தில் அவன் மீது அலட்சியம் காட்டும் நாயகி, பொறுப்பான அவன் வேலையை பார்த்து நட்பு பாராட்டி அவள் வேலை பார்க்கும் ஐடி கம்பெனியில் வேலை வாங்கி கொடுக்கிறாள்.அதோடு நில்லாமல் அலுவலகத்தில் ஏற்கனவே ஒரு பாய் பிரண்டு இருக்கும் நிலையில் இவனிடமும் நெருங்கி பழகுகிறாள். ஒரு கட்டத்தில் நாயகனின் வீட்டுக்கே வந்து அவனை இறுக அணைத்து ‘லவ் யூ’ சொல்கிறாள்.
இப்போது நாயகன் காதல் கனவில் மிதக்க, இன்னொரு பக்கம் சைலண்டாக நாயகிக்கும் அவளது அலுவலக பாய் பிரண்டுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.இதனால்வெகுண்டெழும் நாயகன் நாயகியிடம் கலாட்டா செய்யும் அளவுக்கு போகிறான்.
காதலியோ கூலாக நான் உன்னிடம் ‘லவ் யூ’ தான் சொன்னேன். அவனிடம் தான் ‘ஐ லவ் யூ’ சொன்னேன் என்று பிளேட்டை திருப்புகிறாள்.இதனால் மனமு டைந்த காதலன் அவள் வாங்கி கொடுத்த வேலையை உதறு கிறான்.இதற்கிடையே மணமகனாகநிச்சயிக்கப்பட்ட அலுவலக நண்பனுக்கும் நாயகிக்கும் இடையே பார்ட்டியில் முட்டிக் கொள்ள, நாயகி இப்போது நாயகன் பக்கம் தன் காதலை திருப்புகிறாள்.
ஆனால் நாயகனோ இப்போது காதலை தூக்கி போட்டுவிட்டு தொழில் துறையில் கால் பதிக்கிறான். இதன் பிறகு நாய கனை துரத்திப் பிடித்து காதல் சொல்ல முயற்சிக்கும் நாயகி அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பது கிளைமாக்ஸ். நாயனாக யூடியூப் பிரபலம் ஹரி பாஸ்கர் திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார். புதுமுகம் மாதிரி இல்லாமல் நடிப்பில் புகுந்து விளையாடி இருக்கி கிறார். அதுவரை தவிர்த்து வந்த காதலியின் அன்பை எதிர்பாராமல் அவர் காட்டுகிற பரவச உணர்வு திரை தாண்டி தெறிக்கிறது. மறுபடியும் காதலியால் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் மனதில் கோபத்தை காட்டும் இடத்திலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் சொதப்பி இருப்பது லாஸ்லியாவின் கேரக்டர் தான். காதலில் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் அந்த கேரக்டர் போலவே அவரது நடிப்பிலும் ஏகப்பட்ட தடுமாற்றம். இதற்கு அவரை மட்டும் சொல்லி குற்றமில்லை. அவரது கேரக்டரை குளறுபடியாய் அமைத்த இயக்குனரையே அது சாரும்.
நாயகியின் அலுவலக நண்பனாக ரயான் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகனின் அப்பா இளவரசு, அம்மா, தங்கை நடிப்பில் நடுத்தர குடும்பத்தை கண் முன் நிறுத்துகிறார்கள். நாயகனின் நண்பனாக வரும் சாரா சிரிப்பு போர்ஷனை கையில் எடுத்திருக்கிறார். காதலுக்கு இவர் தரும் அட்வைஸ் ரகளை ரகம்.
ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள்
ரசிக்க வைக்கிறது.
எழுதி இயக்கி இருக்கும் அருண் ரவிச்சந்திரன் இன்றைய தலைமுறையின் காதலை புதிய கோணத்தில் அணுக முயன்று இருக்கிறார். ஆனால் அதற்கான காட்சி அமைப்புகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது தான் மொத்த கதைக்கும் பலவீனம். 25 வருடங்களுக்கு முன்பே வந்து போன இந்த டைப் கதைகள் காட்சி நெடுக கண் முன் வந்து போகின்றன.
ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் காதல் அங்கீகரிக்கப் படாவிட்டால் பின் தொடர்ந்து தொல்லை தரக் கூடாது என்ற செய்தியை மட்டுமே இந்தப் படத்தில் பாடமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் அந்த ‘லவ் யூ’ கண்டு பிடிப்புக்காக விருதே தரலாம்.
