திரை விமர்சனம்

அலங்கு – திரை விமர்சனம்

மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார். நாய் இல்லாமல் நான் இல்லை என்கிற அளவுக்கு நாய் மீது பிரியம்  கொண்டவர் அவர். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேலைக்காக கேரளா செல்பவர் கூடவே தன் பிரியத்துக்குரிய நாயை அழைத்து செல்கிறார். அங்கு எதிர்பாராமல் நடக்கும் வேண்டாத சம்பவத்தை தொடர்ந்து நாய்க்கு ஆபத்து ஏற்படுகிறது. நாயைக் காப்பாற்றும் முயற்சியில் ஒருவரது கையை நாயகன் வெட்டி விடுகிறார்.
கையை இழந்தவர் ‘குணாநிதி அண்ட் &கோ’வை கொல்ல துடிக்க…அந்த காட்டு வழி பயணம் அவர்களை எதிரிகளிடமிருந்து தப்பிக்க வைத்ததா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை..

மலைவாழ் பழங்குடி இளைஞனாக குணாநிதி காட்டுக்குள் நடக்கும் அந்த வீர தீர போராட்டத்தில் அவரது துடிப்பான நடிப்பு அந்த கேரக்டருக்கான நியாயத்தை செய்து விடுகிறது.


மலையன் கதாபாத்திரத்தில் காளி வெங்கட். தனது உணர்வை இயல்பான நடிப்பு மூலம் கடத்தி விடுகிறார். உறவினர் ஒருவன் தனது வாரிசிலிருந்து சிட்டி காரன் இடத்தில் அவர் கண் கலங்குவதோடு நம் கண்களையும் குள மாக்கி விடுகிறார்.
ஒரு கையை இழந்து விட்டு கொலை வெறியோடு நாயகனை துரத்தும் கேரக்டரில் சரத் அப்பானி மிரட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வில்லன் கிடைச்சாச்சு.

 

நாயகனின் அம்மாவாக ஸ்ரீரேகா, கேரள முதலாளியாக செம்ம வினோத் கவனிக்கத்தக்க நடிப்பில் கவருகிறார்கள்.
அடர்ந்த காடுகளின் அழகு, ஆபத்து இரண்டையும் ஒருசேர காட்சிப்படுத்தி இருக்கும் பாண்டி குமாரின் கேமராவுக்கு ஒரு ராயல் சல்யூட். அஜீஷின் பின்னணி இசை வனப்பகுதி காட்சிகளில் நிஜமாகவே திகில் ஊட்டுகிறது.

எழுதி இயக்கி இருக்கும் எஸ் பி சக்திவேல், காளி என்ற நாயையும் அதன் செயல்பாடுகளையும் மிக இயல்பாக படமாக்க இருப்பதோடு வனப்பாதையின் நடக்கும் ஜீவ மரண போராட்டத்தையும் ஜீவன் குறையாமல் வடிவமைத்திருக்கிறார். படத்தில் நாய் தான் இப்பதான் எந்த போதிலும் பிற்பகதில் அதற்கான காட்சிகள் குறைவு. உன்னால வனப்பகுதியில் ஓடும் திரைக்கதை முடிவு வரை வேகம் குறையாமல் இருப்பது இயக்குனர் ஸ்பெஷல்.

அலங்கு,  அடடா அட்டகாசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *