சினிமா செய்திகள்

கல்வித் தூண்களான ஆசிரியர்களைக் கொண்டாடும் “ஐயை ஐயா” பாடல்!!

நமது வாழ்வை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் பாடலாக “ஐயை ஐயா” பாடல் வெளியாகியுள்ளது.

அபிநாத் சந்திரனின் மதுரை குயின் மிரா பள்ளி தயாரித்துள்ள இப்பாடலை, ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். ஐலாவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல், கல்வியில் மட்டுமல்லாது மாணவர்களைத் தனி நபர் ஆளுமைகளாகவும், பொறுப்பான குடிமக்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை எடுத்துரைக்கிறது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடல் கல்வியாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. “ஐயைஐயா” இப்போது அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியாகியுள்ளது. விரைவில் இப்பாடலின் காணொளி பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியிடப்படும்.

Song link 🔗 https://lnkfi.re/AiyaiAiyaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *