சினிமா செய்திகள்

இந்தியில் வெற்றி பெற்ற ‘பஞ்சாயத்’ சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘தலைவெட்டியான் பாளையம்’ செப்டம்பர் 20ம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..
பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.

மும்பை—செப்டம்பர் 05, 2024— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் நகைச்சுவை-இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பின் உலகளாவிய பிரீமியர் காட்சி வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளது. பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது. அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது. இந்த தலைவெட்டியான்பாளையம் எனும் இணையத் தொடர் பிரைம் உறுப்பினர் பட்டியலில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

“எங்களின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த பார்வையாளர்களின் மேம்பட்டு வரும் ரசனைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளுக்கு ஈடு செய்யும் வகையில், எங்கள் ரசிகர்கள், தொடர்புபடுத்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய அதிகாரபூர்வமான மற்றும் மனதைக் கவரும் கதைக் களத்தைக் கொண்ட உருவாக்கங்களை எங்கள் உள்ளூர் மொழி உள்ளடக்கங்களுடன் விரிவுபடுத்த எங்களை முன்னோக்கி உந்தித் தூண்டுகிறது. புதிய, நூதனமான, இந்த மண்ணில் வேரூன்றிய கதைகளை வழங்குவதில் எங்களுக்குள்ள தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொள்ளும் TVF போன்ற நீண்டகால தயாரிப்பாளர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்த அசல் தமிழ் நகைச்சுவை இணையத் தொடர் தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பை வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். பாலகுமாரன் முருகேசன் எழுத்தில் உருவான இந்த சீரீஸ், நகைச்சுவையோடு இணைந்த மகிழ்ச்சி பொங்கச்செய்யும் மனதுக்கு இதமான தருணங்களின் ஒரு கலவையை, எளிமையான அதேசமயம் மனதைக் கொள்ளை கொள்ளும் கதையின் வழியாக நம் முன்னே காட்சிப்படுத்தி நம்மைக் கவர்ந்திழுத்து கட்டிப்போட்டுவிடுகிறது. அதிகாரபூர்வமான கிராமப்புற வசீகரம் மற்றும் உலகளாவிய சமூக இயக்கவியலின் கருப்பொருள் அதன், விதிவிலக்கான பல்திறன் வாய்ந்த நடிகர்கள் குழுவால், உயிர்ப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொடர் பார்வையாளர்களைக் பெருமளவில் கவரும் என்பது உறுதி” என்று பிரைம் வீடியோ இந்தியா, கன்டெண்ட் லைசென்சிங் டைரக்டர் மனிஷ் மெங்கானி கூறினார்.

“தலைவெட்டியான் பாளையம் எனும் இணையத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” தனது கருத்தை பகிர்ந்து கொண்ட, தி வைரல் ஃபீவர் (TVF) பிரசிடண்ட் விஜய் கோஷி கூறினார், “ப்ரைம் வீடியோவுடன் இணைந்து தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை வழங்கியது மிகவும் அற்புதமான அனுபவத்தை தந்தது. .ஒரு சிறிய கிராமத்தின் அன்றாட வாழ்க்கை சம்பவங்களின் எளிமையான அதே சமயம் சில சமயங்களில் சவாலான அம்சங்களை நகைச்சுவையோடு கலந்து நம்பகத்தன்மையுடன் படம்பிடித்தில் ஒட்டுமொத்த அணியினரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்இந்த உருவாக்கத்துக்கு உயிரூட்ட அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை தந்த எங்களின் சிறப்பு மிக்க திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவைச்சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இந்த நிகழ்ச்சியை டி வி எஃப் நிறுவனத்தின் உதவியின்றி நாங்கள் உருவாக்கியிருக்க முடியாது. பஞ்சாயத் (S1-S3) இயக்குநரான தீபக் மிஸ்ரா மற்றும் TVF ஒரிஜினல்ஸ் தலைவர் ஷ்ரேயான்ஷ் பாண்டே போன்ற செயல் வல்லமை மிக்க TVF உள்ளக செயல்பாட்டாளர்கள் உதவியின்றி நாங்கள் இதை சாதித்திருக்க முடியாது. தலைவெட்டியான் பாளையம் எனும் இணையத் தொடர் செப்டம்பர் 20 அன்று பிரைம் வீடியோவில் உலகமெங்கும் திரையிடப்படும் போது இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *