செய்திகள்திரை விமர்சனம்

‘ககனாச்சாரி’ (மலையாளம்) பட விமர்சனம்

   

டைம் டிராவல் கதைகளை பல படங்களில் பார்த்திருப்போம்.. இந்த படம் அதையெல்லாம் பின்னோக்கி தள்ளிவிட்டு கொஞ்சம் முன்னோக்கி 2040 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது.

அந்த காலக்கட்டத்தில் பூமியில் உள்ள எரிபொருள் எல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு அரசால் தடை செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மனிதர்களை அரசாங்கம் ஒவ்வொருவராக கண்காணிக்கிறது.

அப்போது நடைபெறும் கதைக்களத்தை வைத்து காமெடியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் சந்து.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் ராணுவ வீரர் விக்டர் வாசுதேவன் (கே.பி.கணேஷ்குமார்) இரண்டு நபர்களுடன் வாழ்ந்து வருகிறார்.. அவர்கள் ஆலனும் (கோகுல் சுரேஷ்), அஜுவும் (வைபவ் வர்கீஸ்) ஆவர்.. இவர்கள் மூவருமே திருமணம் ஆகாதவர்கள்.

இந்த சூழ்நிலையில் ஏலியன்கள் பற்றி ஆவணப் படம் தயாரிக்க வரும் நபர்கள் இவரிடம் பேட்டி எடுக்க வருகின்றனர்.

அப்போது அந்த செய்தியாளருக்கும் இவருக்கும் நடைபெறும் உரையாடல்களே இந்த படத்தின் மீதிக்கதை.. அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து முழுப்படத்தையும் இயக்கி இருக்கிறார் அருண் சந்து.

கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார் நகைச்சுவை உணர்வோடு பல நையாண்டி வார்த்தைகளை கொடுத்து படத்தை கலகலப்பாக்கி இருக்கின்றனர்.. முக்கியமாக மலையாளிகள் / மலையாளம் தெரிந்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் முழுவதுமாக ரசிக்கலாம்..

ஏனென்றால் கீழே ஆங்கிலத்தில் சப்டைட்டில் படிப்பதற்குள் அடுத்த டயலாக் வந்து விடுகிறது.. இதனால் பல காட்சிகளை உங்களால் ரசிக்க முடியாது..

ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் வசனம் பேசாமல் பார்வையிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருப்பது சிறப்பு..

250 வயதாகும் அந்த ஏலியன் (எப்படி இன்னும் இளமையாக இருக்கிறார்? என்பது தான் தெரியவில்லை)

ஏலியன் மீது 27 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது.. இவருக்காக எழுதப்பட்ட வசனங்கள் காதலுடன் காமெடி கலந்து ரசிக்க வைக்கிறது..

ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசும் இருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் கதைக்கான புதிய களத்தை ஒரே அறையில் படமாக்கி இருப்பது தான் புத்திசாலித்தனம் என்றாலும் அது பார்வையாளர்களுக்கு அயற்சியை தருகிறது… ஆவணப்படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது..

சங்கர் சர்மாவின் இசை ஓகே ரகம்.. படத்தொகுப்பாளர் சீஜே அச்சு மற்றும் கலை இயக்குநர் எம்.பாவா ஆகியோரது பணிகள் பாராட்டுக்குரியது.

ககனாச்சாரி… விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் ஒருவன் என்பதுதான் இந்த படத் தலைப்பின் பொருள்.. அப்படி இருக்கையில் ஒரு சர்வதேச கதையை இன்னும் சுவாரசியமாக கமர்சியல் கலந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் கொடுத்திருக்கலாம் இயக்குனர்.

ஆனால் மலையாள பட பாணியில் அவர்களுக்கு உரித்தான ஸ்டைலில் படமாக்கி இருப்பது கொஞ்சம் வருத்தமே..

இங்கே தமிழ் சினிமாவில் 1980 – 1940.. களில் போன்ற கதைகளை படமாக்கி கொண்டிருக்கும் சூழ்நிலையில் நமக்கு முன்னோடியாக 2040 ஆம் ஆண்டு உள்ள கதைக்களத்தை இயக்குனர் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

அதே சமயம் இன்று நாம் தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை மிச்சப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.. அவைகளை வீணாக்கி நாம் வாழ தொடங்கினால் எதிர்காலத்தில் நமக்கான பேராபத்து காத்திருக்கும் என்பதையும் இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கும் இயக்குனர் அருண் சந்துவை வெகுவாக பாராட்டலாம்.