7/G விமர்சனம்.. அப்பார்ட்மெண்ட் அமானுஷ்யம்
ரோஷன் பஷீர் – ஸ்மிருதி வெங்கட்.. இந்த இளம் தம்பதியர் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோஷமாக குடியேறுகிறார்கள்.. இவர்களின் வீட்டு எண் 7G.. சொந்த வீடு என்ற தனது கனவு நினைவானதாக மகிழ்ந்து வருகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட்..

இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் ரோஷன் பஷீரின் தோழி சினேகா குப்தா அவரை அடைய தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் ரோஷன் வெளியூர் செல்கிறார்.
இந்த சமயத்தில் 7ஜி அப்பார்ட்மெண்டில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது.. அந்த பேய் இது என் வீடு.. நீ வீட்டை காலி செய்து ஓடு என ஸ்மிருதியை மிரட்டுகிறது.
அந்த பேய் யார்? அவர் இந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவது ஏன? இந்த வீட்டில் அப்படி என்ன நடந்தது? ஸ்மிருதி வெங்கட் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.

7ஜி ரெயின்போன் காலனி என்ற மறக்க முடியாத படத்தை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் சோனியா அகர்வால்.. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதாலோ என்னவோ 7ஜி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.. ஆனால் இந்த 7ஜி கொஞ்சம் கூட சோனியாவுக்கு பொருந்தாமல் போய்விட்டது வருத்தமே..
அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்ந்தவர் ஸ்மிருதி வெங்கட்.. சாந்தமான முகம் சமரசம் செய்து கொள்ளாத நடிப்பு என வெளுத்துக்கட்டி இருக்கிறார்.
படத்தின் வில்லன் இசையமைப்பாளர் இருவரும் ஒருவரே.. அவர்தான் சித்தார்த் விபின்.. இசையை விட நடிப்பில் அதிகமாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.. மிரட்டல் கலந்து வில்லத்தனம் செய்திருப்பது அவரது நடிப்பில் புதுவகை..
சிநேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் உண்டு.. சினேகா குப்தா, செய்யும் மந்திரம், சூனிய காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

போலீஸ் வரும் செல்வா ஓரிரு காட்சிகள் என்றாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..
ஹரூன் இயக்கத்தில் உருவான படம் 7/G..
இப்படத்திற்கு கண்ணா ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்
ட்ரீம் ஹவுஸ் சார்பில் ஹரூன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். ஜூலை 5 முதல் இப்படம் திரைக்கு வருகிறது..
ஒளிப்பதிவும் இசையும் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் மோசம் இல்லை.. எந்த சுவாரசியமும் இல்லாமல் எந்த திருப்புமுனையும் இல்லாமல் இந்த 7G படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.. அவரே தயாரித்தும் இருக்கிறார் என்பதால் எந்த உதவி இயக்குனரிடம் ஆலோசனை கேட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது..
ஆக நாம் பார்த்து பார்த்து சலித்து போன பேய் கதையை எந்த மிரட்டலும் இல்லாமல் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹாரூன்..
