பயமறியா பிரமை திரை விமர்சனம்..
நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘பயமறியா பிரம்மை’.
சிறைக்கைதியை சந்தித்து அவரின் கதையை புத்தகமாக எழுத ஒரு எழுத்தாளர் துணைவுடன் சென்று நேர்காணல் காண்கிறார்.
கொலை குற்றவாளி ஜெகதீஷ் என்பவரை சந்திக்கிறார் எழுத்தாளர் கபிலன்… தான் செய்த கொலையை கலையாக எண்ணி ஒவ்வொரு கதையாக விவரிக்கிறார்.

அதில் 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்தல் என்பதை பதிவு செய்கிறார்.
அந்த உரையாடல்கள் தான் இந்த படத்தின் மீதிக்கதை..
இந்த படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் & பலர் நடித்துள்ளனர்.
இவர்களில் முதன்மையாக ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் ஜெகதீஷ்-ன் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.. ஜெகதீஷை கேள்வி கேட்க ஒரு எழுத்தாளராக ஒரு பத்திரிகையாளராக வினோத் சாகர் நடித்திருக்கிறார்.. இவர்கள் இருவரும் பேசிப் பேசியே படத்தை பாதி ஓட்டி விட்டார்கள்.. கடைசியில் இவரையும் கொல்ல முடிவெடுத்து அப்படியே விட்டுவிட்டார்..
இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்..
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ளது. இவரே இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ஏனென்றால் இவரை விட்டால் வேறு யாரும் இந்த படத்தை தயாரிக்க மாட்டார்கள்.
புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை என்ற கருத்தோடு இந்தப் படம் பயணிக்கிறது..
மனிதர்களை கொல்லும் கொலையைக் கூட கலையாக பார்க்கும் ஒருவனும் கதை தான் இந்த படம்.. கொலை என்பது பாவ செயல்.. கொடூரமானது என எண்ணும் நபர்களுக்கு மத்தியில் இந்த படம் வந்திருப்பது வேதனை தான்..
கொலையை ஒருவன் எப்படி ரசிக்க முடியும்? அதுவும் 25 ஆண்டுகளில் 96 கொலைகளை அவன் எப்படி செய்ய முடியும்? போலீசாரிடம் சிக்காமல் இருப்பது எப்படி? என்ற கேள்விகளுக்கு இந்த படத்தில் எந்த பதிலும் இல்லை.. அதற்கான விளக்கமும் இல்லை..
படத்தின் பெரும்பாலன காட்சிகளை ஒரே மாதிரியான கேமரா ஆங்கிள்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.. இதுவே படத்தை பார்ப்பதற்கான சோர்வை தருகிறது.
