லாந்தர் விமர்சனம்..
விதார்த் ஒரு போலீஸ் அதிகாரி.. இவரின் மனைவிக்கு ஒரு வியாதி இருப்பதால் அடிக்கடி சிரமப்பட்டு வருகிறார்.
ஒரு நாள் இரவில் மனைவியை கவனித்துக் கொள்ள சீக்கிரம் வீட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.. ஏதேனும் பிரச்சனை என்றால் சக போலீஸிடம் அழைக்க சொல்லிவிட்டு செல்கிறார்.
அப்போது ரோட்டில் நடந்து செல்லும் ஒரு நபரால் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.. காண்போரை எல்லாம் அடித்துக் கொண்டே செல்கிறார்.. எனவே போலீஸ் எசிபி விதாரத்துக்கு தகவல் பறக்கிறது.. இதனை அடுத்து மனைவியை திடீர்னு விட்டுவிட்டு போலீஸ் பணிக்கு திரும்புகிறார்.

அந்த மர்ம நபரை கண்டுபிடிக்க விடிய விடிய போலீஸ் தேடும் வேட்டையே இந்த ‘லாந்தர்’..
குரங்கு பொம்மை இறுகப்பற்று அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களை தன் நடிப்பு மூலம் பேச வைத்தவர் விதார்த்.. இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டருக்காக அவர் மெனக்கெட்டு இருந்தாலும் திரைக்கதையும் வசனங்களும் சிரிப்பை உண்டாக்குகிறது.
எந்த கமர்சியல் ஐட்டங்களையும் கலக்காமல் எதார்த்த நேர்மையான போலீசை முன் நிறுத்தி இருக்கிறார் விதார்த்.. சக போலீஸ் இடம் கூட கடிந்துக் கொள்ளாமல் அவர் செய்யும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது..
விதார்த்தின் மனைவியாக சுவேதா டோரதி.. அழகாக இருக்கிறார்.. ஆனால் அவருக்கு பெரிய காட்சிகள் இல்லை.. மயக்கம் போடுவதும் பின்னர் எழுவதும் இப்படியாக காட்சிகள் நகர்கின்றன..
மஞ்சு என்ற கேரக்டர் நடித்தவர் சஹானா.. இந்த படத்தில் திருப்புமுனை கேரக்டர்.. ஆனால் அவரது வயது 19 – 22 என காட்டும்போது அவருக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்றே தோன்றுகிறது.. முகத்தில் கூடுதல் முதிர்ச்சி தெரிகிறது. இவருக்கு பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற வியாதி சொல்லப்பட்டிருந்தாலும் போதிய கேரக்டர் அழுத்தம் இல்லை.. இவருக்கு ஜோடியாக விபின்.. நல்ல ஸ்மார்டாக இருக்கிறார்.
கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், பசுபதி ராஜ் உள்ளிட்ட பலரின் கேரக்டர்கள் வந்து செல்கிறது.. இவர்களுக்கான முக்கியத்துவம் பெரிதாக இல்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசை – பிரவீன்
ஒளிப்பதிவு – ஞான சௌந்தர்
எடிட்டிங் – பரத் விக்ரமன்
இயக்கம் – சாஜி சலீம்
40 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட லாந்தர் விளக்கை குறிக்கும் தலைப்பு.. ஆனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பது விளங்கவில்லை.
ஆனால் இடைவேளையில் இன்டர்மிஷன் போடும்போது லாந்தர் விளக்கு அதில் இருக்கிறது.. மற்றபடி படத்தில் எங்கும் லாந்தர் விளக்கு பயன்படுத்தவில்லை.
ஒரு க்ரைம் திரில்லர் கதையை இன்னும் சுவாரசியமாக நகர்த்தி இருந்தால் படம் பிடித்திருக்கும்.. முக்கியமாக இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பை கூட்டிச் சென்றாலும் அதன் பின்னர் அட இவ்வளவுதானா என தோன்றுகிறது.
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் கேமராமேன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கிறது..
ஆக.. லாந்தர்.. வெளிச்சம் பத்தலை
