திரை விமர்சனம்

தி அக்காலி பட விமர்சனம்

பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாந்திரீக உலகங்களில் நடக்கக்கூடிய கிரைம்களை பற்றி பேசும் படம்.

internel affairs போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் மேற்கொண்ட அமானுஷ்ய கேஸை பற்றி விசாரிக்கிறார்.

அதன் வழியாக அந்த கதை விரிவடைகிறது.

இந்த உலகில் தன்னம்பிக்கையின்மை, தோல்வி, மனவேதனை, இயலாமை ஆகிய பல காரணங்களால் சாவின் விளிம்பிற்கு சென்று உயிர் நீக்க முற்படுபவனை கடவுளின் எதிரியான சாத்தான் அரவணைத்துக் கொள்கிறார் என்றும், அதன் மூலமாக நிறைய நரபலிகள் நடைபெறுகின்றன என்றும் கூறி, இந்த கதை பல அமானுஷ்ய விஷயங்களில் செல்கிறது.

படத்தின் பட்ஜெட் மிகவும் சிறியது என்றாலும், கை தேர்ந்த ஒளிப்பதிவால் படத்தை ஆங்கில படத்திற்கு இணையாக காட்டியிருக்கிறார்கள் அற்புதம்.

காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்து விட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது.

சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது.
உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விசயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்க்கிறாரா இல்லையா என்பது திகில் விலகாமல் சொல்லும் திரைக்கதை படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறது.

காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய் கதையின் மாந்தர்களாகவே மாறித் தெரிகிறார்கள்.

நடிப்பில் பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி மிரட்டுகிறார்கள். சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், கிறிஸ்தவ மத போதகர் நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் திரைக்கதையின் கூடுதல் பலம்.

ஒளிப்பதிவாளர் கிரி முர்பி, கலை இயக்குநர் தோட்டா தரணி இருவரும் இந்த திகில் கதையின் முதுகெலும்பு எனலாம்
VFX காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும்பாலான காட்சிகளை பிரமாண்டமாக நகர்த்த பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற கதைக்களத்தை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்திருப்பதில் கவனம் பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *