கருடன் விமர்சனம் 4.25/5… உயர பறக்கும்
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதை நாயகனாக நடித்திருந்தார் சூரி.. அதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தனது 2வது படத்தில் சூரி கதை நாயகனாக நடிக்க சசிகுமார் உன்னி முகுந்தனும் இந்த கருடன் படத்தில் இணைந்துள்ளனர்.
சிறு வயது முதலே சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் சிறந்த நண்பர்கள்.. நட்புக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.. அப்போது ஆதரவற்ற சிறுவனாக இருக்கும் சூரியும் இவர்களுடன் இணைகிறார்.

இவர்கள் மூவரையும் அப்பத்தா வடிவுக்கரசி தான் பெற்ற பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.
சசிகுமாரையும் உன்னி முகுந்தனையும் கண்ணை இமைக்காப்பது போல எந்த பிரச்சனை வந்தாலும் காக்கும் நபராக சூரி இவர்களுடனே இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் உன்னி மனைவி ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்.. உங்கள் நண்பன் உங்களை விட நன்றாக இருக்கிறார்.. உங்களை நம்பி வந்த நான் சந்தோஷமாக இல்லை.. எனக்கு வசதியாக வாழ பணம் வேண்டும் என்கிறார்.. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது..

இந்த சூழ்நிலையில் மினிஸ்டர் ஆர்வி உதயகுமார் மற்றும் தியேட்டர் ஓனர் மைம் கோபி விரிக்கும் சதி வலையில் விழுகிறார் உன்னி முகுந்தன்..
அதன் பிறகு என்ன நடந்தது.. சூரி யார் பக்கம் சென்றார்.? சசிகுமாருக்கு அல்லது உன்னிக்கு ஆதரவாக இருந்தாரா.? என்பதுதான் மீதிக்கதை.
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரேவதி, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நாயகனாக தோன்றிய முதல் படத்திலேயே தன் நடிப்பில் முத்திரை பதித்திருந்தார் சூரி. இந்த கருடன் படத்தில் அதை மிஞ்சும் விதமாக சண்டைக் காட்சிகளிலும் அதிரடியாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.
சசிகுமார் மீது காட்டும் அன்பாகட்டும் உன்னி மீது காட்டும் விசுவாசம் ஆகட்டும் என இரண்டிலும் வெளுத்து கட்டி இருக்கிறார். அதுபோல நாயகி ரேவதி மீதான காதலும் ரசிக்க வைக்கிறது..
ஒரு காட்சியில் பிரிகிடா அவரின் காதலை சொல்லும் போது தன்னை காதலிக்கிறாரோ? என்று சூரி கன்பியூஸ் ஆகும் அந்த காட்சியில் காமெடியன் சூரியை காண முடிகிறது..
சசியும் உன்னியும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. தமிழ் சினிமாவுக்கு நட்பு என்றால் அது சசிகுமார் தான்.. இந்த படத்தில் கண்கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்..

மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை நட்பாகவும் பின்னர் வில்லத்தனம் காட்டும் அவரது தோற்றமும் வேற லெவல்..
மிகவும் நேர்மையான போலீசாக சமுத்திரக்கனி.. அவரது கம்பீரமும் தோற்றமும் அவர் நடிப்பு மீதான மரியாதையை உயர்த்துகிறது..
நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பத்தாவாக வடிவுக்கரசி.. அவரது கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது..
சசிகுமாரின் மனைவியாக சிவதாநாயர், மற்றும் உன்னி முகுந்தனின் மனைவி, சூரியின் காதலியாக ரேவதி ஷர்மா & உன்னி மச்சானின் மனைவியாக பிரிகிடா உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.. முக்கியமாக ஷிவதா அழும் காட்சி நம்மை கண்கலங்க வைக்கும்..
இது போன்ற கணவனுடன் வாழ்வதற்கு அவனை கொன்று விடுங்கள் என பிரிகிடா சொல்லும் போதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.. அதுபோல சசிகுமாரின் பிள்ளைகள் இருவரும் நடிப்பில் நம்மை கவனிக்க வைக்கின்றனர்..
நாயகி ரேவதி ஷர்மாவின் அழகான கண்களும் உடை அலங்காரமும் நம்மை அப்படியே பார்க்க வைக்கிறது..
வில்லன்களாக வரும் ஆர்வி உதயகுமாரும் மைம் கோபியும் தங்கள் வில்லத்தனத்தில் சிறப்பு.. கத்தி கத்தி பேசாமல் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தல்..
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம்தான் இந்த கருடன்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்… யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் செம.. இடைவேளை காட்சியில் வரும் பாடலும் பின்னணி இசையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. தெறிக்க விட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா..
படத்தின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் கண்களுக்கு விருந்து.. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு காட்சியில் கொஞ்சம் நீளத்தை வெட்டி எறிந்து இருக்கலாம்..
இந்த படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதுவரை தான் தொடாத கதைகளை எடுத்து நம்மை புருவம் உயர்த்த வைத்து விட்டார் துரை செந்தில்குமார்.
ஒவ்வொரு காட்சியும் அழகாக ரசித்து திரைக்கதை அமைத்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார்.
மற்றபடி இந்த கருடன் கோடை விடுமுறைக்கு செம விருந்து.. உயர பறப்பான் கருடன்..
