ஹிட் லிஸ்ட் விமர்சனம் 3.75/5.. திரில்லர் ஹிட்
பிரபல சூப்பர் ஹிட் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் படம் இது.. தன் குருநாதர் விக்ரமனின் மகனை தன் சொந்த தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் கே.எஸ். ரவிக்குமார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர் நாயகன் விஜய் கனிஷ்கா.. இவர் மென்பொறியாளர். எந்த ஊர் ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதினால் சுத்த சைவ பிரியர் இவர். இவரது தாய் சித்தாரா இவரது தங்கை அபி நட்சத்திரா..

டிஎஸ்பி சரத்குமாரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கிறார். அந்த சமயம் இவருக்கு திடீரென ஒரு அழைப்பு வருகிறது.. உன் அம்மா மற்றும் தங்கையை நான் கடத்தி வைத்திருக்கிறேன். நான் சொன்னபடி நீ ஒரு பிரபல ரவுடியை கொன்றால் அவர்கள் இருவரையும் விட்டு விடுவேன் என்கிறார்..
போலிஸ் சரத்குமாரிடம் இதை விஜய் கனிஷ்கா தெரிவிக்க அவன் சொல்வதை செய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என போலீஸ் அவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
லைவ் வீடியோ காலில் அந்த மாஸ்க் மேன் மிரட்டுவதால் வேறு வழி இன்றி போராடி அந்த ரவுடியை கொள்கிறார்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு கொலை செய்ய சொல்கிறான் அந்த மாஸ்க் மேன். அடுத்த கொலையும் இவர் செய்தாரா? அந்த மாஸ்க் மேனின் உண்மை முகம் என்ன.? அவன் ஏன் அடுத்தடுத்து கொலைகள் செய்ய சொல்கிறான்? நாயகன் என்ன செய்தார்? போலீஸ் சரத்குமார் என்ன செய்தார்? என்பதெல்லாம் மீதிக்கதை.
தன் அறிமுகப்படுத்திய விஜய் கனிஷ்கா ஓர் அருமையான கேரக்டரை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ப தன் நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார் படம் முழுவது அப்பாவியாக தோன்றும் அவர் கிளைமாக்ஸ் காட்சி யில் அவர் அதிரடியாக தோன்றும் இடங்கள் அப்பிளாஸ் அல்லும்.. முதல் படத்திலேயே ஹீரோயின் இல்லாமல் டூயட் இல்லாமல் விஜய் கனிஷ்காவின் புது ரூட் சினிமா புதுமுக நாயகர்களுக்கு புது ரூட் எனலாம்..
கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம் & நாயகனுக்கும் மோதும் இன்டெர்வல் சண்டைக்காட்சி அனல் தெறிக்கும் பைட்..
சரத்குமார் சாந்தமாக வந்தாலும் ஒரு அதிரடி பைட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார்.
அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா ஆகியோரின் பங்கும் மிகப்பெரிய பலம்
டாக்டராக வரும் ஸ்மிருதி வெங்கட், தந்தையாக வரும் சமுத்திரக்கனி, மருத்துவமனை டீனாக வரும் கௌதம் மேனன் உள்ளிட்ட கலைஞர்கள் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..
ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்டோரி இருந்தும் அவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை..
சூப்பர் ஹிட் இயக்குனர் விக்ரமனின் மகன் படம் அறிமுகம் என்ற எந்த நிர்பந்தமும் எடுத்துக் கொள்ளாமல் ஹீரோயின் டூயட் என எதையும் சொல்லாமல் கதை ஓட்டத்திற்கு இயக்குனர்கள் சென்று இருப்பது அவர்கள் கதை மீதான வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டி இருக்கிறது.
மர்ம மனிதர் யார் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் காட்டி ஒரு 20 நிமிடம் வித்தியாசமான கதையை நகர்த்தி இருக்கின்றனர்.. அதே சமயம் பிளாஷ்பேக் காட்சி கொரோனா காலத்தில் ஸ்மிருதி வெங்கட்டின் அர்ப்பணிப்பை காட்டும்போது டாக்டர்கள் மீதான நம்பிக்கை உயர்கிறது.
போலீஸ் எல்லாம் கெட்டவர்கள் அல்ல அவர்களுக்குள்ளும் ஈரம் இருக்கிறது சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது என்பதை சரத்குமாரின் கேரக்டர் உணர்த்துகிறது..
சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ்.. தேவையில்லாத பாடல் காட்சி எங்கும் இல்லை அழகான ஒரு பாடல் அதிரடியான பாடல் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளரும் தங்கள் பணியை நேர்த்தியாக செய்து இந்த ஹிட் லிஸ்ட்க்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்.
சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சிஷ்யர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது.. அதுவே மனிதம்.. என்ற தத்துவத்தை சொல்லும் ஹிட் லிஸ்ட்.. கமர்சியல் கலந்து ஒரு சோசியல் மெசேஜையும் ஒன்றையும் இயக்குனர்கள் சொல்லியிருப்பது புதுசு..
