திரை விமர்சனம்

பகலறியான் விமர்சனம் 3.25/5.. நைட் பைட் ட்விஸ்ட்

கிட்டத்தட்ட இரண்டு, மூன்று கதைகளை இணைத்து இந்த பகலறியான் படத்தை இயக்கியிருக்கிறார் முருகன்… படம் முழுவதும் ஓர் இரவில் நடக்கும் கதை.. பகல் அறியாதவன் என்பதன் வார்த்தையே பகலறியான்..

சின்ன வயதிலேயே தந்தையை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்றவர் நாயகன் வெற்றி.. ஒரு நாள் இரவில் தன்னை நம்பி வந்த காதலியை அக்ஷயாவை வைத்துக்கொண்டு ஓர் இடத்திற்கு பயணிக்கிறார்.. அப்போது விபச்சார தொழில் செய்தும் ஒருவனிடம் பணம் கேட்டு வாங்கி பெறுகிறார். இதனால் நாயகிக்கு நாயகன் மீது சந்தேகம் வருகிறது.

இதே சமயத்தில் தன் தங்கையை காணவில்லை என இரவு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் மற்றொரு நாயகன் முருகன்.. வில்லன் கும்பல் தான் தன் தங்கையை கடத்தி வைத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.. இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது..

இந்த இரு கதைகளும் சந்திக்கும் இடம் தான் இந்த படத்தின் மீதிக்கதை..

நடிகர் வெற்றி தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுக்கிறாரா? அந்த கேரக்டர்கள் வந்து சேர்கிறதா என்று தெரியவில்லை.. எப்போதும் போல இருக்கமான முக பாவனைகளுடன் நடிக்கிறார்..

எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்கிறார்.. அது நாயகி ஆனாலும் வில்லன் ஆனாலும்.. அதுபோல புகைப் பிடித்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.

சைலன்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகன் கவனிக்கப்படும் நபராகவே தெரிகிறார்.. அவரது முகமும் முறுக்கேறிய முரட்டு கம்பீரமும் செம மாஸ்.. எந்த ஒரு வார்த்தைகளும் பேசாமல் சைலன்டாக வந்து நடிப்பில் பேச வைக்கிறார்.

நாயகி அக்‌ஷயா கந்தமுதன் கண்களாலும் உதடுகளாலும் நிறைய பாவனைகளை கொடுத்து நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.. ஒரு கட்டத்தில் நாயகன் வெற்றியின் நோக்கம் தெரிந்தும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் சூப்பர் நடிப்பு.

இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் சாப்ளின் பாலு நடித்திருக்கிறார் காமெடி செய்து இருந்தவர் இதில் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.

போலீசாக நடித்திருக்கும் சாய் தீனா-வின் கேரக்டர் வெறுமனே இருக்கிறது.. ஆனால் சீரியஸான இந்த படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கிறார்..

விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம்… படத்தொகுப்பாளர் குரு பிரதீப் தன் பணியில் நேர்த்தி..

ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா இரவு முழுவதும் சுழன்று காட்சிகளை அமைத்திருக்கிறது.

2வது நாயகனாக நடித்திருக்கும் முருகன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. விறுவிறுப்பான திரைக்கதையை ஓர் இரவில் நடக்கும் கதையாக அமைத்து ரசிகர்களை சீட்டு நூனியில் உட்கார வைத்திருக்கிறார்.

ஆனாலும் படத்தின் இடைவேளை வரை காட்சிகள் சிறு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.. அதற்கு காரணம் இவர்கள் யார் என்ற விளக்கத்தை கொடுத்திருக்கலாம்.

ஆனால் கிளைமாக்ஷில் எதிர்பாராத திருப்புமுனையை கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.. நாயகிக்கும் நாயகனுக்கும் உள்ள புரிதலை அழகாக எந்த ஒரு வசனமும் இல்லாமல் கொடுத்திருப்பது நம்மை சிந்திக்க வைக்கும்.

ஆக பகலறியான்.. நைட் பைட் ட்விஸ்ட்