சாமானியன் விமர்சனம் 4/5.. ராம (ராஜன்)-ராஜ்ஜியம்
மதுரையில் இருந்து தன் நண்பர் ராதாரவியை பார்க்க சென்னைக்கு வருகின்றனர் ராமராஜன் மற்றும் அவரது நண்பர் எம் எஸ் பாஸ்கர்.
சென்னையில் உள்ள பிரபல வங்கிக்கு செல்லும் ராமராஜன் அங்கு உள்ள அதிகாரிகளை பிணைய கைதிகளாக வைத்து அவர் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்ற சொல்கிறார்.. இல்லை எனில் இந்த வங்கியை பாம் வைத்து வெடிக்க வைத்து விடுவேன் என மிரட்டுகிறார்.

அவர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது.. இதனால் போலீஸ் அதிர்ச்சி அடைகின்றனர்.
வெறும் சில லட்சங்களுக்காக மட்டுமே ராமராஜன் போராடுவது நோக்கம் என்ன.? அவரது பின்னணி என்ன? என்பதை பற்றி ஆராய்கின்றனர்.. அப்போது அவர்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கிறது.
உண்மையில் ராமராஜன் யார்.? அவரது பின்னணி & நோக்கம் என்ன? ஒரு சில பேங்க் அதிகாரிகளை மட்டும் அவர் மிரட்டுவது ஏன்? என்பதுதான் மீதிக்கதை.
Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other’s.
செண்டிமெண்ட் பாட்டு ரொமான்ஸ் என கிராமத்து மனிதனாகவே நாம் ராமராஜனை பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் கிராமத்து மனிதர் சிட்டிக்கு வந்து அரசாங்கத்தையே அலறவிடும் நபராக நடித்திருக்கிறார்.. அதே சமயம் அட்வைஸ் செய்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வயதுக்கு ஏற்ற கேரக்டரை எடுத்து இருக்கும் ராமராஜனை பாராட்டலாம்.. அது போல அவரது நண்பராக வரும் எம்எஸ் பாஸ்கர் & ராதாரவி உள்ளிட்டோரும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
ராமராஜன் ரீஎன்ட்ரி படம் என்பதால் நிறைய நட்சத்திரங்களை களமிறக்கி இருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.
மைம் கோபி, கோதண்டம், போஸ் வெங்கட் கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா உள்ளிட்ட கதையின் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமான தேர்வு.
இளம் காதலர்களாக லியோ சிவகுமார் மற்றும் நக்ஷாசரன் நல்லதொரு நடிப்பை கொடுத்து இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி அவதிப்படும் இளம் தம்பதிகளை கண்முன் நிறுத்தி கலங்க வைத்து இருக்கின்றனர்.
ஸ்மிருதி வெங்கட், அபர்ணா உள்ளிட்டோர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கின்றனர்.
இவர்களுடன் வினோதினி, தீபா சங்கர், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் உள்ளனர்.
Written & Directed by
R RAHESH
Producer : V Mathiyalagan
Banner : Etcetera Entertainment
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Story : V Karthik Kumar
Costume : SP Sugumar
Choreographer: Vishnuvimal
PRO : A. John
நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜா ராமராஜன் இசையில் உருவான படம் இந்த சாமானியன்.. இந்தக் கூட்டணியை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்து இருப்பார்கள்.. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அருமையான பாடல்களும் பின்னணி இசையும் கொடுத்திருக்கிறார் இசைஞானி.. மகள் பற்றிய தாலாட்டு பாடல் நிச்சயம் அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் பிடித்த பாடலாக இருக்கும்..
அருள் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை முக்கியமாக பேங்கில் ராமராஜன் மிரட்டும் அந்த காட்சிகளில் அனைத்து ஆங்கிலும் சூப்பர் அது போல கிராமத்து காட்சிகளும் கண்களுக்கு விருந்து.
ராம் கோபி என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.. இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு குறைந்து இருக்கிறது.. பிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம்..
ராமராஜனின் முகத்தில் கொஞ்சம் மேக்கப் கவனித்திருக்கலாம்.. அவரது கண்கள் மிகவும் சோகமாக இருக்கிறது.. முக்கியமாக ஆர்மி காட்சிகள் ராமராஜனுக்கு பொருந்தவில்லை..
ராமராஜனை முழுக்க முழுக்க வித்தியாசமான தோற்றத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ். அதேசமயம் 1980-களில் ராமராஜன் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதையும் ஆங்காங்கே காட்டி இருக்கிறார். ராமராஜன் பாடல்களை சில இடங்களில் ஒலிக்க விட்டு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் இளையராஜா..
ராமராஜனை கேஎஸ்.ரவியை மிரட்டும் போது டவுசரை கழட்டி விடுவேன் என்கிறார்.. டவுசர் போட்டு தான் என் வாழ்க்கையை நான் தொடங்கினேன் என்ற வசனம் ராமராஜன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..
ஆக.. இந்த சாமானியன்.. ராமராஜனுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் என நம்பலாம்..
