PT SiR விமர்சனம் 3.75/5.. ஃபேவரைட் சார்

சினிமா செய்திகள் திரை விமர்சனம்

ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பிடி ஆசிரியராக பணிபுரிகிறார் ஹிப் ஹாப் ஆதி.. அதே பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக நாயகி கஷ்மிரா.

தன் கண்முன்னே எந்த தவறு நடந்தாலும் கண்டு கொள்ளாத பயந்த சுபாவம் உள்ளவர் ஹிப்ஹாப் ஆதி.. ஒரு வழியாக நாயகிக்கும் நாயகனுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.. அன்றைய தேதியில் திடீரென இளவரசுவின் மூத்த மகள் அனிகா மர்மமான முறையில் கொல்லப்பட்ட கிடப்பதாக தகவல் வருகிறது.

இதனையடுத்து ஹிப் ஹாப் ஆதியும் அங்கு செல்கிறார்… ஆனால் அது கொலை அல்ல தற்கொலை என கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் மூடி மறைக்கிறது.

அனிகா மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் ஆதி, காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஈமெயில் அனுப்புகிறார். இதனையடுத்து பிரச்சனை தமிழகத்தின் தலைப்புச் செய்தி ஆகிறது.

மேலும் விசாரணை வேட்டையில் இறங்குகிறார் நாயகன் ஆதி.. இறுதியில் என்ன ஆனது? உண்மையில் அனிகா இறந்து விட்டாரா? ஆதி என்ன செய்தார்? அது கொலை என்றால் அதை செய்தது யார்? இறுதியில் சட்டத்தின் தீர்ப்பு என்ன? நீதி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜாலியான டீச்சராக ஹிப் ஹாப் ஆதி.. குழந்தைகளுடன் ஆட்டம், பெற்றோருக்கு பாசமான மகன் தங்கையுடன் சண்டை நாயகியுடன் ரொமான்ஸ் என கலகலப்பாக படத்தைக் கொண்டு செல்கிறார்.. ஆனால் பிடி சார் கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் மெனக்கட்டு உடலில் கவனம் செலுத்தி இருக்கலாம் நாயகன் ஹிப் ஹாப் ஆதி.

வழக்கமான ஹீரோயின் வேடத்திற்கு வந்து செல்லும் நாயகியாக கஷ்மிரா.. கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முதன்மை கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்தர்..

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இளவரசு அனிகா, அபி நட்சத்திர, வில்லன் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்..

இதில் அனிகாவின் தந்தையாக இளவரசு.. அவரது நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது.. பெரும் கல்வியாளர் தியாகராஜனை எதிர்த்துப் பேசி விட்டு அவர் செல்லும் காட்சி கைதட்ட வைக்கிறது. இளவரசுவின் நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆதியின் அம்மாவாக தேவதர்ஷினி அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பள்ளியில் படிக்கும் நாள் முதல் எத்தனை வயதானாலும் ஆண்களின் இடியில் சிக்கும் சிறைப்பறவைகள் பெண்கள் என அவர் பேசும் காட்சி ஆண்களையும் கண்கலங்க வைக்கும்.

பாலியல் டார்ச்சர் செய்யும் கல்வியாளராக தியாகராஜன்.. இந்த நெகடிவ் கேரக்டரை அவர் ஒத்துக்கொண்டதற்காகவே அவரை நிச்சயம் பாராட்டலாம்..

இவர்களுடன் கோலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.. நீதிபதியாக பாக்யராஜ் வக்கீலாக மதுவந்தி, ஆதியின் மாமனாராக வக்கீலாக பிரபு, முனீஸ் காந்த் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் உண்டு.. இவர்கள் திரைக்கதையின் பலத்தை அதிகரித்து இருக்கின்றனர்.

நாயகன் ஹிப்ஹாப் ஆதி தான் படத்தின் இசையமைப்பாளர்.. இவரது இசையில் இது 25 வது படம்.. தற்போது எல்லாம் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் இசையில் கொஞ்சம் குறை வைத்து விட்டாரோ.? குட்டி பிசாசு என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.. மற்ற பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பின்னணி இசை ஓகே ரகம்..

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.. இவரது கேமராவில் ஸ்கூல் கலர்ஃபுல் ஸ்கூலாக மாறி நிற்கிறது..

கார்த்திக் வேணுகோபால் படத்தை இயக்கியிருக்கிறார் பாலியல் குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.. அது பற்றி விழிப்புணர்வு ஆண் பிள்ளைகளிடம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.. ஆனால் அதனுடன் நிறைய கமர்சியல் கலந்து சொல்லி இருக்கிறார்.

முக்கியமாக பள்ளி மாணவிகள் கிண்டல்.. சோசியல் மீடியாக்களில் ட்ரோல்.. பிடி சார் இங்கிலீஷ் டீச்சர் லவ் என அனைத்தையும் கலந்து சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர்.

கோடை விடுமுறைக்கு மாணவர்களுக்கு ஏற்ற இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார் ஐசரி கே கணேஷ்.

ஆக இந்த பிடி சார்.. ஃபேவரைட் சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *