இங்க நான்தான் கிங்கு பட விமர்சனம்.. 4/5 காமெடி கிங்கு

35 வயது ஆகியும் திருமணத்திற்கு வரன் தேடும் 90ஸ் கிட்ஸ் சந்தானம்.. எத்தனை வரன்கள் தேடியும் பெண் கிடைக்காத காரணத்தினால் மேட்ரிமோனி அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார்..
இவர்க்கு அப்பா அம்மா இல்லை.. வீடு இல்லை என்பதால் பெண் கிடைப்பதில்லை என நினைத்து 25 லட்சம் கடன் வாங்கி வீட்டையும் வாங்கி விடுகிறார். அப்படியும் எந்த வரேனும் கிடைக்காமல் அலைகிறார்.
இந்த சூழ்நிலையில் அவருக்கு ஜமீன் குடும்பத்து பெண்ணை தேடி முடித்து வைக்கிறார் புரோக்கர் மனோபாலா.
பெண் பார்க்கும் செல்லும் நாளில் அன்று பெண் பிடித்து விட உடனடியாக அடுத்த நிமிடமே கல்யாணமும் முடிந்து விடுகிறது.. கடனை அடைக்க ஜமீன் குடும்பத்தை கைவிடக் கூடாது என்று நினைப்பில் உடனே சந்தானமும் ஓகே சொல்லி விடுகிறார்.
ஆனால் திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில் தான் தம்பி ராமையா ஜமீன் குடும்பம் என்றாலும் அவருக்கு 10 கோடிக்கு மேல் கடன் இருப்பதை அறிகிறார்.
அதன் பிறகு என்ன செய்தார் சந்தானம்? கடனை எப்படி அடைத்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
SANTHANAM – VETRIVEL
PRIYALAYA – THENMOZHI
THAMBI RAMAIYA – VIJAYAKUMAR (JAMEEN)
BALA SARAVANAN – BALA (CHINNA JAMEEN)
VIVEK PRASANNA – AMALRAJ
MUNISHKANTH – BODY BALRAM
SWAMINATHAN – SWAMI
MAARAN – ROLEX
SESU –
தனக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுப்பதில் சந்தானம் கில்லாடி என்பது மீண்டும் நிரூபித்திருக்கிறார்.. தன்னுடைய கேரக்டர் மட்டுமே பலமாக இருக்க வேண்டும் என நினைக்காமல் அனைவருக்கும் சமமான பங்கை கொடுத்து காமெடியை களைக்கட்ட செய்து இருக்கிறார் சந்தானம்.. இந்தப் படத்தில் ரொமான்ஸிலும் சந்தானம் கூடும் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பது சிறப்பு.
நாயகி பிரியா லையா புதுமுகம் என்றாலும் எங்குமே புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தன் நடிப்பில் கவர்ந்து விடுகிறார்.. ஜமீன் வீட்டு பெண்ணாக வரும் காட்சியிலும் எதார்த்த பெண்ணாக வரும் காட்சியிலும் தூள் கிளப்பி விட்டார்.. முக்கியமாக விவேக் பிரசன்னா இறந்த பின்னர் இவர் போடும் திட்டங்கள் பலே பலே..
முனிஷ்காந்த் & கூல் சுரேஷ் ஆகியோரது காமெடி ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக வண்டி ஹாரன் அடிக்கும் காட்சி & நிச்சயம் சிரிப்புக்கு கேரண்டி.. அதுபோல சேச்சிங் செய்யும் போது பால சரவணனிடம் ரூட் கேட்கும் காட்சியும் வேற லெவல்..
மனோபாலா சில கட்சிகளே வந்தாலும் மறக்க முடியாத நடிப்பு.. முக்கியமாக அவர் சந்தானத்தை மாட்டிவிட்டு கிளம்பும் காட்சி விக்ரம் ஸ்டைல்..
இதில் விவேக் பிரசன்னாவுக்கு இரட்டை வேடம்.. இந்த முகரைக்கு இரண்டு டபுள் கேரக்டர் என்று அவரையும் கலாய்த்து இருக்கிறார் சந்தானம் அந்த காட்சியும் ரசிப்பீர்கள்.
அதுபோல தம்பி ராமையா மற்றும் அர்ஜுன் சம்பந்தி இருவரையும் கலாய்த்து இருக்கிறார் சந்தானம்.. சத்தியராஜிற்கு கவுண்டமணி கிடைத்தது போல சந்தானத்திற்கு தம்பி ராமையா கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.. மாமா மாப்பிள்ளை என்ற கேரக்டரில் இருவரும் அதகலம் செய்து இருக்கின்றனர்.. இவர்களின் காமெடி கூட்டணி எப்பொழுதுமே ஹிட்டுதான்..
மச்சான் ஆக வரும் பால சரவணன் தன் பங்குக்கு வெளுத்து கட்டி இருக்கிறார்.. கால் கேர்ள்ஸ் ஆக வரும் இரண்டு பெண்களும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் நம்மை கவர்ந்து விடுகின்றனர்.
சந்தானம் படம் என்றாலே சில நடிகர்கள் நிச்சயமாக பங்கு பெறுவார்கள்.. கூல் சுரேஷ், மாறன், சேசு, ஸ்வாமிநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த படத்தில் கவனிக்கும்படியான கேரக்டரரை வழங்கி இருக்கின்றனர்.. இவர்களும் கிடைத்த இடத்தில் எல்லாம் காமெடியை அள்ளி வீசி இருக்கின்றனர்.

முதன்முறையாக சந்தானம் படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் அனைத்தும் வேற லெவல்.. முக்கியமாக ‘மாலு மாலு…. குலுக்க குலுக்கு… மாயோணே.. ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. காமெடிக்காக பின்னணி இசையிலும் நல்ல மெனக்கடலை கொடுத்திருக்கிறார் இமான்.
ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.. முக்கியமாக காமெடி கதைகளுக்கு ஏற்ப தங்கள் கேமராவை வைத்து நம்மை ரசிக்க வைக்கின்றனர்.
ஆனந்த் நாராயன் படத்தை இயக்கியிருக்கிறார்.. சந்தானத்திற்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்து அதில் அவருக்கான கூட்டணி அமைத்து படத்தை கலகலப்பாக கொண்டு சென்று இருக்கிறார்.. அதுபோல பாடல்களிலும் அதிக கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.
நடிகர்கள் நடிகர்கள் அரசியல்வாதி நயன்தாராவின் நெட்ப்ளீக்ஸ் திருமணம் என அனைத்தையும் கலாய்த்து வசனங்கள் வைத்திருப்பது ரசிகர்களை மேலும் கலகலப்பாக்குகிறது.
ஆக குடும்பத்துடன் பார்க்கும் வகையில் கலகலப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கின்றனர் சந்தானம் மற்றும் ஆனந்த் நாராயன்..
ஆக இங்க நான் தான் கிங்கு.. ஒரு காமெடி கிங்கு
