சினிமா செய்திகள்திரை விமர்சனம்

எலக்சன் விமர்சனம் 3.5/5.. நல்ல செலக்சன்

ஒரு அரசியல் கட்சியில் உண்மையான தொண்டனாக 40 வருடங்களுக்கு மேலாக இருப்பவர் ஜார்ஜ் மரியான்.. இவரது மகன் விஜயகுமார்.

ஒரு கட்டத்தில் கட்சிக்காக உண்மையான நட்பை நண்பனை கூட இழந்தவர் இவர்.. ஒரு நாள் கட்சி இவரை அவமதித்துவிடவே தன் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது நினைத்து வருந்தும் விஜயகுமார் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முயல்கிறார்..

பணம் கொடுத்தால் தான் தனக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற சூழ்நிலையில் 10 லட்சத்திற்கும் + கடன் வாங்கி தேர்தலில் செலவழித்துப் போட்டியிடுகிறார்.

ஆனால் அதிகார பலம் கட்சி பலம் என்ற ஆகியவற்றுடன் போட்டி போட முடியாமல் ஐந்து ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுவிடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? மீண்டும் வந்த தேர்தலில் போட்டியிட்டாரா? அல்லது அத்தோடு அரசியலை முடித்துக் கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், அருள் & பலர்..

உறியடி படத்தின் மூலம் அறியப்பட்ட விஜயகுமார் இதில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். பொதுவாகவே எந்த சினிமா என்றாலும் அரசியலில் தேர்தலில் போட்டியிட்ட உடனே நாயகன் வென்று விடுவார்கள்.

ஆனால் இது எதார்த்தம் கலந்து அரசியலில் தோல்வியும் உண்டு வெற்றியும் உண்டு என்பதை காட்டியிருக்கிறார்கள். இதற்காகவே விஜயகுமாரன் நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் அரசியலுக்கு அவரது கேரக்டர் இன்னும் வலுவில்லை என்றே தோன்றுகிறது..

‘அயோத்தி’ படத்தில் அருமையான நடிப்பை கொடுத்த ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்தில் அழகான குடும்ப பாங்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார்.

உண்மை தொண்டனாக குடும்பத்தை விட்டு அரசியலுக்காக வாழும் ஒரு எதார்த்த தொண்டனாக ஜார்ஜ் மரியான் தன் கேரக்டரில் உயர்ந்து நிற்கிறார்.

இஸ்லாமியராக பாய் கேரக்டரில் நடித்த அருள் நம்மை கவர்கிறார்.. இவரது பாடி லாங்குவேஜ் இவருக்கு கூடுதல் கவனத்தைப் பெற வைக்கிறது.

பாவல் நவகீதன் மற்றும் திலீப் இருவரும் கதையின் நாயகர்களாக தோன்றி இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.. படம் முழுக்க இவர்களது ஆதிக்கம் இருக்கிறது..

திருநங்கையாக நடித்தவர், சேவியர், அம்பேத், மூர்த்தி, இஸ்லாமியராக நடித்த அருள், அவரது நண்பர், லீ கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்..

இயக்கம்: தமிழ்

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ரீல் குட் பிலிம்ஸ்

ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜூ

படத்தொகுப்பு: சி எஸ் பிரேம்குமார்

ஒளிப்பதிவும் படத்தொகுப்பு பாராட்டும் படும் வகையில் இருக்கிறது. முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு கிராமத்தை பார்த்த உணர்வை பெற முடிகிறது..

96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கோவிந்த் வசந்தா அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார் முக்கியமான ஒரு காதல் பாடலும் தேர்தல் பாடலும் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘சேத்துமான்’ படத்தை இயக்கியவர் தான் இந்த தமிழ்.. ஆரவாரம் இல்லாத அரசியலை எதார்த்தம் கலந்து அருமையாக இயக்கி இருக்கிறார் தமிழ்.

ஆக இந்த எலக்சன்.. நல்ல செலக்சன்