சத்யராஜ் மீனா கவுண்டமணி நடித்த ‘தாய்மாமன்’ படத்தையும் கொஞ்சம் ‘அமைதிப்படை’ படத்தையும் கலந்து அரசியல் நையாண்டி விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மாமன் இமான் அண்ணாச்சியுடன் தேர்தல் அலுவலகத்திற்கு செல்கிறார் எம்ஜிஆர் பாண்டியன் (அமீர்).

அங்கு எதிர்க்கட்சி ஆனந்தராஜின் மகள் சாந்தினி ஸ்ரீதரணை சந்திக்கிறார்.. பார்த்தவுடனே அவள் மீது காதல் தொற்றிக் கொள்கிறது.. எனவே தானும் தேர்தலில் போட்டியிட்டு காதலியை சந்தித்துக் கொள்ளவும் காதலை வளர்த்துக் கொள்ளவும் திடீரென தேர்தல் அரசியல் களத்தில் குதிக்கிறார் அமீர்..

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்லமாக நாயகி சாந்தினியும் அமீரை காதலிக்க தொடங்குகிறார்.

வார்டு உறுப்பினர் செயலாளர் மாவட்ட செயலாளர் என படிப்படியாக அரசியல் களத்தில் உயர்ந்து வருகிறார் அமீர்..

இந்த சூழ்நிலையில் ஆனந்தராஜ் கொல்லப்படுகிறார்… இந்த கொலைப்பழி அமீர் மீது விழுகிறது.. இதனால் இருவரும் அரசியலில் விரோதி ஆகின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? அமீர் – சாந்தினி காதல் கைகூடியதா? அவர்களின் காதல் களம் என்ன? அரசியல் நிலவரம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்….

பெரும்பாலும் சீரியஸ் கேரக்டர்கள் நாம் பார்த்த அமீர் இந்த படத்தில் கலாட்டா பெயர் வழியாக இறக்கி இருக்கிறார்.. காதலிக்காக அரசியல் இறங்கி அவர் செய்யும் கலாட்ட அலப்பறைகள் ரசிக்க வைக்கிறது.

சாந்தினி ஸ்ரீதரன் ஆரம்பத்தில் ஒல்லியாகவும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் குண்டாகவும் காட்சிகள் காட்டப்படுகிறது.. நிஜத்திலே அப்படியா அல்லது படத்திற்காக அவர் உடலை ஏற்றினாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் சேலையிலும் டீ சர்டிலும் அழகாகவே வந்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

ஆனந்தராஜின் காட்சிகள் பெரிதாக இல்லை.. ஆனாலும் கொடுத்த பாத்திரத்தில் செம.. இவரின் வீட்டிலேயே வந்து அமீர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அந்த காட்சி ரசிக்க வைக்கிறது.. அடுக்கு மொழிகளில் பேசி நம்மை அடிக்கடி கவர்ந்து விடுகிறார் அமீர்.

இதர அரசியல்வாதிகளாக இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், குட்டிபுலி சரவணசக்தி உள்ளிட்டோரும் உண்டு.. அரசியல் நையாண்டிக்கு உதவி இருக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக எம்ஜிஆர் புகழுக்காக எழுதப்பட்ட ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ என்ற பாடல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலை பாடியவர் மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியம். அவரின் கடைசி பாடல் இது.

ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பு படம் தங்கள் பணிகளில் நேர்த்தி… மக்களுடன் தொடர்பான காட்சிகளை வைத்து ஒரு அரசியல் நையாண்டி படத்தை கொடுக்க இவர்கள் உதவி புரிந்திருக்கின்றனர்.

ரஜினி கமல் விஜய் முதல் அனைத்து அரசியல் சார்ந்த நடிகர்களையும் வசனம் மூலம் கலாய்த்து இருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. ஆளும் கட்சி ஆண்ட கட்சி ஆளுகிற கட்சி என அனைத்தையும் நையாண்டி வசனங்கள் மூலம் கதற விட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தையும் விட்டு வைக்கவில்லை.. ஆனால் எம்ஜிஆர் என்ற ஒருவரை மட்டுமே புகழ்ந்து காட்சிகளை வைத்திருக்கின்றனர்.

காதலி தமிழுக்காக அமீர் செய்யும் அலப்பறைகள் தான் இந்த உயிர் தமிழுக்கு..

அரசியல் படம் என்பதால் எல்லா காட்சிகளையும் நிறைய கரை வேட்டிகளையும் நிறைய நடிகர்களின் நடிக்க வைத்து காட்சிகள் பிரம்மாண்டம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா.

தேர்தல் முடிவுகள் வரும் சமயத்தில் இந்த உயிர் தமிழுக்கு திரைப்படம் வந்து அரசியல் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது எனலாம்..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/Uyir-Thamizhukku-1024x377.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/Uyir-Thamizhukku-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்சத்யராஜ் மீனா கவுண்டமணி நடித்த 'தாய்மாமன்' படத்தையும் கொஞ்சம் 'அமைதிப்படை' படத்தையும் கலந்து அரசியல் நையாண்டி விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மாமன் இமான் அண்ணாச்சியுடன் தேர்தல் அலுவலகத்திற்கு செல்கிறார் எம்ஜிஆர் பாண்டியன் (அமீர்). அங்கு எதிர்க்கட்சி ஆனந்தராஜின் மகள் சாந்தினி ஸ்ரீதரணை சந்திக்கிறார்.. பார்த்தவுடனே அவள் மீது காதல் தொற்றிக் கொள்கிறது.. எனவே தானும் தேர்தலில் போட்டியிட்டு காதலியை சந்தித்துக் கொள்ளவும் காதலை வளர்த்துக்...