சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து அவரைப் போல் நடிகனாக உயர வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வருகிறார் லால்.. ஆனால் அவரால் சினிமாவில் சேர முடியாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக வேறு வழி இன்றி போட்டோகிராபராகவே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்.

தன்னால் முடியாததை தன் மகனால் முடித்துக் காட்ட வேண்டும் சாதிக்க வேண்டும் என நினைக்கும் லால் சிறு வயது முதலே மகனுக்கு சினிமா ஆசை ஊட்டி ஒவ்வொரு விதத்திலும் வளர்த்து வருகிறார்..

ஒரு கட்டத்தில் இளைஞனான பிறகு கவின் சினிமா வாய்ப்பு தேடி அலைகிறார்.. மும்பையில் ஒரு பிரபல நபரிடம் நடிப்பு பயிற்சிக்காக செல்கிறார். ஆனால் தேர்வாகவில்லை. எனவே வேறு வழியின்றி மும்பையில் தங்கி அங்கேயே பல கூலி வேலைகள் செய்து சிரமப்பட்டு வருகிறார்.

ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கேட்டு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் ப்ரீத்தி முகுந்தன் கவினை காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்பு வருகிறது. அதன்படி காரி பயணிக்கும் போது திடீரென பெரிய விபத்து ஏற்படுகிறது. இதனால் காதலியும் இவரை விட்டு சென்று விடுகிறார்.

சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி வந்தாலும் கவினின் முகத்தில் பெரிய தழும்பு காயம் உள்ளது. இதனால் கண்ணாடியில் முகத்தை பார்க்கவே அச்சப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்தாரா? கவினால் ஸ்டார் ஆக முடிந்ததா? என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கவினுடன், லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் ஒரு சாமானியனின் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் கவின்..

ஒரு கட்டத்தில் மும்பையில் கையில் காசு இல்லாமல் ஒவ்வொரு வேலைகளையும் செய்து அவர் வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் அந்த காட்சிகள் நரக வேதனை.

சினிமாவும் கைவிட்டது.. காதலியும் கை கழுவியது என கண்கலங்கும் காட்சியில் கவின் நம்மையும் கலங்க வைக்கிறார்..

ப்ரீத்தி மற்றும் அதிதி ஆகிய இரு நாயகிகளுடனும் கவினின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது.

இரண்டு நாயகிகள் இருந்தாலும் பிரீத்தி அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். மெல்ல மெல்ல காதல் வயப்படுவது பிறகு ஒரு கட்டத்தில் விலகி செல்வது என யதார்த்த பெண்களையும் கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

இரண்டாவது நாயகியாக வரும் அதிதியும் அழகான நடிப்பில் கவர்ந்து விடுகிறார்.

கவினின் அப்பாவாக லால், அம்மாவாக கீதா கைலாசம். மற்றும் மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், சஞ்சய் ஸ்வரூப், ராஜா ராணி பாண்டியன், தீரஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மகனுக்காக ஓடி உழைக்கும் ஒரு தந்தை கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் லால்.. தன்னால் சினிமாவில் நுழைய முடியவில்லை என்று எண்ணி அவர் உருகும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தன் தாய் இறந்து கிடக்கும் சமயத்தில் மகனுக்கு வாய்ப்பு அழைப்பு வரும்போது அவர் உடல் மொழி கூட நடிக்கிறது..

கவினின் அம்மாவாக கீதா கைலாசம்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தென்பட்டாலும் மகனுக்காக ஏங்கி நிற்கும் ஒரு அம்மாவின் உணர்வை காட்டியிருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வந்து இயக்குனர் வெற்றிமாறன் கைத்தட்டல் பெறுகிறார்..

ஒரு கட்டத்தில் பிஸியான நடிகர் பின்னர் வேலை இழந்து தெருவில் ஐஸ் விற்கும் நபராக காதல் சுகுமார்..

இயக்குனர் இளனின் தந்தை பாண்டியன் இந்த படத்தில் அதிதின் தந்தையாக நடித்திருக்கிறார் கொஞ்ச காட்சிகள் என்றாலும் நடிப்பில் கச்சிதம்..

காமெடியில் கலக்கும் மாறன் இதில் குணசத்திர நடிகராக நாயகனை ஹீரோ ஹீரோ என்று அழைத்து உற்சாகப்படுத்தும் கேரக்டரில் உயர்ந்து நிற்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்… ஒளிப்பதிவாளர் – எழில் அரசு..

1960 களில் வந்த படங்களைப் போல 15 நிமிடத்திற்கு ஒரு பாடல்களை போட்டு விட்டார் யுவன் சங்கர் ராஜா.. ஆனால் ஒவ்வொரு இசையும் அழகு என்றாலும் திகட்ட திகட்ட பாடல்களை கொடுத்து விட்டது கொஞ்சம் ஓவர்.. ஏனென்றால் படத்தின் நேரத்தை இதுவே அதிகரித்து விட்டது. வழக்கம்போல பின்னணியில் அதிர வைத்திருக்கிறார் யுவன்.

ஒளிப்பதிவாளர் எழிலரசுவின் கேமரா கைவண்ணம் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. அவரின் கேமரா ஆங்கிள்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

1980களில் கதை தொடங்கி 2020 மேல் பயணிக்கிறது.. அதற்கு ஏற்ப கலை இயக்குனர் தன் கைவண்ணத்தை காட்டி காட்சிகளை ரசிக்க வைக்கிறார்.

ஒரு நடிகனை ஸ்டார் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் இளன் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.. பள்ளி.. கல்லூரி.. குடும்பம்.. சினிமா ஆபீஸ்.. ஐடி ஆபீஸ் என அனைத்தையும் கலந்து ஒரு எதார்த்த மனிதன் வாழ்வை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

ஒரு நடிகனாக வேண்டும் என ஆசைப்படும் கவனுக்கு உதவும் அப்பா. ஆசையை மறுக்கும் அம்மா. திருமணத்திற்காக காத்திருக்கும் அக்கா என ஒவ்வொருவரையும் அழகாக வடிவமைத்திருக்கிறார். ஆனால் படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்து இருக்கலாம் அல்லது இயக்குனராவது சரி செய்து இருக்கலாம்.

ஆக இந்த ஸ்டார்.. ரசிக்க வைப்பான்..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/anthai.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/anthai-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து அவரைப் போல் நடிகனாக உயர வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வருகிறார் லால்.. ஆனால் அவரால் சினிமாவில் சேர முடியாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக வேறு வழி இன்றி போட்டோகிராபராகவே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். தன்னால் முடியாததை தன் மகனால் முடித்துக் காட்ட வேண்டும் சாதிக்க வேண்டும் என நினைக்கும் லால் சிறு வயது முதலே மகனுக்கு சினிமா ஆசை ஊட்டி...