அக்கரன் விமர்சனம் 3.25/5…

சினிமா செய்திகள் திரை விமர்சனம்

நாயகன் எம் எஸ் பாஸ்கர் இவருக்கு மனைவி இல்லை.. தாயை இழந்த தனது இரு மகள்களையும் பாசமாக வளர்த்து வருகிறார்.. மூத்தவள் வெண்பா.. இரண்டாவது மகள் பிரியதர்ஷினி.. ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார் ஆனால் போலீஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..

இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. இரண்டு நபர்களை கடத்தி வைத்து எம் எஸ் பாஸ்கர் சித்ரவதை செய்து என் மகளுக்கு என்ன ஆச்சு என்று கொடூரமான முறையில் விசாரணை நடத்துகிறார்.

இவர்கள் இருவரும் யார்? இவர்களுக்கும் தொலைந்து போன மகளுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. பாசம் மிகுந்த அப்பா.. ஆவேச மிகுந்த அப்பா.. மகள்களே உலகம் என நினைக்கும் அப்பா என ஒவ்வொரு இடத்திலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்..

நாயகியாக வெண்பா.. காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. காதலன் மீது நேசத்திலும் தந்தை மீது பாசத்திலும் என்ன சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..

கபாலி விஸ்வந்த் மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் இருவரும் கதையின் நாயகர்களாக தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.. இருவரும் கொஞ்சம் ஆக்ஷன் கொஞ்சம் காதல் என தங்கள் கேரக்டர்களில் கட்சிதம்..

இவர்களுடன் நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா ஆகியோரும் உண்டு.

எழுத்து & இயக்கம் – அருண் K பிரசாத்
இசை – ஹரி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்

ஹரியின் பின்னணி இசை படத்திற்கு பலம்.. இவரது இசையில் உருவான ‘தெய்வம் தந்த பூவாய்….’ என்ற பாடல் இனி தந்தையர் தினத்திலும் மகள்கள் தினத்திலும் கேட்க முடியும்.

எம் ஏ ஆனந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசனை மிக்கவை.. எம் எஸ் பாஸ்கர் ஆக்சன் அவதாரம் எடுத்தபின் வரும் காட்சிகள் அதிரடியான ஒன்று..

அருண்கே பிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. மகள்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்கள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கும் ஒவ்வொரு தந்தையரின் மனநிலையை இந்த கதையில் உணர்த்தி இருக்கிறார்.

இந்தத் திரைக்கதையில் யூகிக்க முடியும் படியான காட்சிகள் நிறைய இருப்பதால் எந்த விதமான சுவாரசியத்தையும் கொடுக்கவில்லை.. எடிட்டர் கொஞ்சம் கவனம் செலுத்தி ஃபிளாஷ்பேக் தற்போதைய காட்சிகள் என வைத்திருந்தால் கதையின் சுவாரசியம் கூடியிருக்கும்..

தாயில்லாமல் வளரும் பெண் பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை எடுக்கும் அவதாரமே இந்த ‘அக்கரன்’.

ஆக இந்த அக்கரன்.. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவசியம் பார்க்கலாம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *