‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவான ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
சோசியல் மீடியாவில் பெண்களிடம் கடலை போடும் வழக்கம் கொண்டவர் நாயகன். ஒரு கட்டத்தில் சோசியல் மீடியாவில் அறிமுகமான நாயகிக்கு காம வலை வீசுகிறார்.
மயிலாடுதுறையில் வசிக்கும் நாயகிக்கு அன்று பிறந்தநாள் என்பதால் அவளை சந்திக்க மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு தன் நண்பனுடன் பைக்கில் செல்கிறார்..
இது சற்றும் எதிர்பாராத நாயகி வேறு வழியின்றி அவனுடன் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்கு பைக்கில் செல்கிறார்.
இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் போது பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இன்று என் பிறந்தநாள் என்ன கிப்ட் கொண்டு வந்தாய் என் நாயகி கேட்க திடீரென கட்டி பிடித்து முத்தமிடுகிறார்.
இதனால் அடித்து விடுகிறார் நாயகி.. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
செந்தூர் பாண்டியன் நாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சோசியல் மீடியாவில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் உணர்வுகளை இந்த படம் பிரதிபலிக்கிறது. அதற்கு ஏற்ப எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். எங்கும் சினிமாத்தனம் இல்லை ஆனால் இது ஒரு டாக்குமென்டரி குறும்படம் போலவே உள்ளது.
பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.
இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்ற படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.
20 நிமிட குறும்படத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர். எதற்காக இந்த படத்திற்கு ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என தலைப்பு வைத்தார் என்பது தான் தெரியவில்லை..
நாம் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டால் தான் நம் வீட்டில் பெண்களும் அது போல நடந்து கொள்வார்கள்.
நாம் மற்ற வீட்டுப் பெண்களை மதிக்காமல் தவறாக நினைத்தால் நம் வீட்டு பெண்களும் தடம் மாறி செல்வார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் பிரசாத் ராமர்.
கேமராவை கையில் வைத்துக் கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரோ என்ன ஒளிப்பதிவாளர்? ஒரே இடத்தில் கேமராவை ஸ்டாண்டில் வைத்து விட்டு சென்று விட்டாரோ? காட்சிகள் மற்றும் நகர்ந்து கொண்டிருக்கிற கேமரா அங்கே உள்ளது.. இதுவே படத்தில் பெரும்பாலன காட்சிகள் இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது..
இளம் வயது ஆண்கள் பேசிக்கொள்ளும் டபுள் மீனிங் காமெடிகள் ஆங்காங்கே கேட்க முடிகிறது.. சில இடங்களில் ரசிக்கவும் சில இடங்களில் எரிச்சலையும் ஏற்படுகிறது.
சோசியல் மீடியாவில் பேசும் எல்லா பெண்களும் தவறான பெண்கள் தான் என நினைக்கும் ஆண்களுக்கு இந்த படம் சவுக்கடி.. அதே சமயத்தில் ஆண்களை நம்பி வெளியே செல்லும் பெண்களுக்கு இந்த படம் ஒரு தக்க பதிலடி.
