ஜெ. பேபி என்று அழைக்கப்படும் ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு பெண் பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் தினேஷின் மனைவி மட்டும் கர்ப்பமாக இருக்கிறார்.

குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் – தம்பி பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அம்மா ஊர்வசி. இதனால் வாழ்க்கையை வெறுத்துப் போகும் இவர் ஒரு கட்டத்தில் எப்படியோ கொல்கத்தாவிற்கு சென்று விடுகிறார்.

இதனால் மேற்குவங்க போலீஸ் சென்னைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் இங்கே உள்ள பிள்ளைகளுக்கு தகவல் கொடுக்கின்றனர்.. இதனையடுத்து அம்மாவை தேடி மாறன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் கொல்கத்தா செல்கின்றனர்.. அங்கு ராணுவத்தில் பணிபுரியும் மூர்த்தி என்பர் உதவியுடன் அம்மா தங்கி இருக்கும் காப்பகத்திற்கு செல்கின்றனர்.

அங்கு சென்று அம்மாவை பார்ப்பதற்குள் காப்பகத்தில் இருந்து ஊர்வசி தப்பி சென்று விடுகிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது? அம்மாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்களா? அண்ணன் – தம்பி இருவரும் பேசிக் கொண்டார்களா? அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஊர்வசி – J. Baby
தினேஷ் – Sankar
மாறன் – Senthil
சேகர் நாராயணன் – Sakthi
மெலடி டார்கஸ் – Selvi.
தாட்சாயிணி – Ramani,
இஸ்மத் பானு – Sankar Wife,
சபீதா ராய் – Senthil Wife
மாயா ஸ்ரீ – Sakthi Wife

இந்த பேபி கேரக்டருக்கு ஊர்வசி தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவிற்கு அழகான சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்திரா காந்தி என் தோழி ஸ்டாலின் ஜெயலலிதா என் நண்பர்கள் என அனைவரையும் கலாய்ப்பதும் ஊர்வசி பின்னி பெடல் எடுத்து விட்டார்.

பிள்ளைகளின் குடும்ப பிரச்சனை.. நான் இருக்கும் வரை நீங்கள் பிரிந்து விடக்கூடாது ஒன்றாக வாழ வேண்டும் என சொல்லும்போது ஒவ்வொரு அம்மாவை நினைவுபடுத்துகிறார்.. நிச்சயம் இந்த படத்திற்கு அவருக்கு விருதுகள் கிடைக்கும்.

எத்தனையோ படங்களில் காமெடியனாக பார்த்து வந்த மாறனை இந்தப் படத்தில் வித்தியாசமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.. அந்த கேரக்டருக்கு ஏற்ப செந்தில் ஆகவே வாழ்ந்திருக்கிறார். குடித்துவிட்டு அவர் செய்யும் அலப்பறைகள் சீரியஸ் படத்திற்கு கொஞ்சம் சிரிப்பை வழங்கி இருக்கிறது.

ஷேர் ஆட்டோ ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு ஏழை குடும்பத்து மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.. அண்ணன் தன்னுடன் பேசாதது குறித்து கவலைப்படும்போதும் அம்மா பாசத்திற்காக ஏங்கும் போதும் மனைவிக்காக வருந்தும்போதும் என நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அம்மாவை தேடி கண்டுபிடிக்கும் மூர்த்தி என்பவரின் கேரக்டர் அற்புதமானது.. இவரை போல மனிதர்கள் நம் வாழ்க்கையில் கிடைப்பது அரிதான ஒன்று.. இவர் தான் நிஜ வாழ்க்கையிலும் தொலைந்து போன அம்மாவை தேடும் மகன்களுக்கு உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மாறன் மனைவி தினேஷ் மனைவி மற்றும்அவர்களின் சகோதரிகள் என அனைவரும் நல்லதொரு நடிப்பை கொடுத்து இந்த படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியாக இருந்துள்ளனர். ஊர்வசியின் பேத்தியாக அபி நட்சத்திர ஒரே காட்சியில் மட்டும் வந்து செல்கிறார்.

Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.

Neelam Productions, Neelam Studios, Vistas Media.

இசை – டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,
கலை – ராமு தங்கராஜ்,
பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.

படத்தின் பின்னணி இசை ஒலிப்பதிவு பாடல் வரிகள் என அனைத்தும் படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன ஆனால் எடிட்டிங் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.. கொஞ்சம் நீளத்தை வெட்டி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

தன் நிஜ வாழ்க்கையில் பெரியம்மா பேபி என்போரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.. எங்கும் சினிமாத்தனம் இல்லாத ஒரு யதார்த்த வாழ்வில் நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக விருந்து படைத்திருக்கின்றனர் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தினர்.

பொதுவாக ரஞ்சித் படங்களில் சாதி கொஞ்சம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இதில் எங்கும் சாதி இல்லாமல் அம்மா மகன்களின் பாசம் அவரின் குடும்ப பிரச்சனை என்பதை அலசி இந்த பேபி படத்தை கொடுத்திருப்பது சிறப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-02-27-at-18.49.16-1-1024x683.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-02-27-at-18.49.16-1-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்ஜெ. பேபி என்று அழைக்கப்படும் ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு பெண் பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் தினேஷின் மனைவி மட்டும் கர்ப்பமாக இருக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் - தம்பி பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அம்மா ஊர்வசி. இதனால் வாழ்க்கையை வெறுத்துப் போகும் இவர் ஒரு கட்டத்தில் எப்படியோ கொல்கத்தாவிற்கு சென்று விடுகிறார். இதனால்...