செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் ‘சத்தமின்றி முத்தம் தா’.

மார்ச் 1 ஆம் தேதி இன்று திரைக்கு வந்துள்ளது.

ஓர் இளம் பெண்ணை முகமூடி அணிந்த நபர் ஒருவர் துரத்த அந்த பெண் ஓடும் போது ஒரு விபத்தில் சிக்கி சுயநினைவை இழக்கிறார். இந்த சமயத்தில் அந்த நபர் அவளை மருத்துவமனையில் அனுமதித்து அவளின் கணவன் நான் என்கிறார்.

ஒரு கட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டிற்கு சென்று கணவனுடன் வாழ ஆரம்பிக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் ஒரிஜினல் கணவன் தன் மனைவி காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். அந்த சமயத்தில் தான் தன்னுடன் வாழ்பவர் உண்மையான கணவர் இல்லை என்ற விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? துரத்திய மர்ம நபரின் நோக்கம் என்ன? அவள் மனைவி என்று சொல்ல என்ன காரணம்?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பணத்துக்காக அட்டூழியம் செய்வது கொலை செய்வது என நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.. ஆனாலும் அவருக்குள்ள மனிதாபிமானம் அடிக்கடி எட்டிப் பார்க்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தேவ்.

ஆக்ஷனில் காட்டும் துணிவு மனைவியிடம் காட்டு பாசம் என உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உண்மையிலேயே தன் கணவன் யார் என புரியாமல் பிரியங்கா திம்மேஷ் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அவரது இளமையும் நம்மை கவர்ந்து இழுக்கிறது.

இரண்டு பெண்களுடன் வாழும் இ(வி)ல்லத்தனமான கேரக்டரில் வியான்..

ஆண்ட்ரியா பாடிய ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு…’ பாடலில் செழிப்பான கவர்ச்சி வழங்கி விட்டார் நிஹாரிகா.

இசிஆர் இன்ஸ்பெக்டராக ஹரிஷ் பெராடி.. இவரை கொஞ்சம் காமெடியாக காண்பித்து விட்டார் இயக்குனர்.

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் 10+ விருதுகளுக்கு மேல் பெற்றவர்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன..

விறுவிறுப்பான கதையை சொன்ன இயக்குனர் அதில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இந்த ‘சத்தம் இன்றி முத்தம் தா’ சத்தமாகவே கேட்டு இருக்கும்..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/1f703c1d-f9c2-46ea-b1d9-1f8a765d8711-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/1f703c1d-f9c2-46ea-b1d9-1f8a765d8711-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் 'சத்தமின்றி முத்தம் தா'. மார்ச் 1 ஆம் தேதி இன்று திரைக்கு வந்துள்ளது. ஓர் இளம் பெண்ணை முகமூடி அணிந்த நபர் ஒருவர் துரத்த அந்த பெண் ஓடும் போது ஒரு விபத்தில் சிக்கி சுயநினைவை இழக்கிறார். இந்த சமயத்தில் அந்த நபர் அவளை மருத்துவமனையில்...