ரொமான்டிக் படங்களில் பெயர் பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டு ஆக்சன் கதை களத்தில் அதிரடி காட்ட இறங்கி விட்டார்.. வருண் என்பவர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

முதல் 10 நிமிடங்களிலேயே ஹீரோ ஹீரோயின் இருவரும் காதலிப்பதும் பின்னர் இருவரும் பிரிவதும் என கதை ஓட்டத்துடன் திரைக்கதையை தொடங்கிவிட்டார்..

இன்டர்நேஷனல் லெவலில் கூலிப்படையில் வேலை செய்கிறார் நாயகன் ஜோஸ்வா.. ஏதேனும் ப்ராஜெக்ட் வந்தால் அதன்படி கொலை செய்வது இவரது வழக்கம்.

ஒரு கட்டத்தில் படத்தின் நாயகி வக்கீல் ராஹேவை சந்திக்கிறார்.. சில நிமிடங்களிலே தன் காதலை சொல்லி தான் யார் என்பதையும் சொல்லி விடுகிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை வர இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

அமெரிக்காவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட அவரைக் காப்பாற்ற அமெரிக்கா செல்கிறார் நாயகி.. இந்த வழக்கில் வாதாடும் வக்கீலுக்கும் கொலை மிரட்டல் வர நாயகிக்கு பாதுகாப்பாக பாதுகாப்பாளராக வருகிறார் நாயகன் வருண்.

இதன் பிறகு என்ன நடந்தது? வழக்கில் ஜெயித்தாரா? நாயகியை காப்பாற்றினாரா நாயகன்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் வருண்.. நாயகி ராஹே.. ரொமான்டிக் படங்களுக்கு பெயர் பெற்ற கௌதம் மேனன் இதில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் இறங்கி வருணை வாட்டி வதைத்து இருக்கிறார் கெளதம் மேனன்..

ஆக்ஷனில் அதிரடி காட்டி இருக்கிறார் வருண்.. டூப் இல்லாமல் வருண் வச்சி செய்து இருக்கிறார்.. ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருப்பது படத்திற்கு பலம்..

நாயகி ராஹேவுக்கு இதுதான் முதல் படம் என்றாலும் நடிப்பிலும் அழகிலும் ரசிக்க வைக்கிறார்.

ராஹே & அவரது அப்பா எமோஷனல் சீன் நிச்சயம் பேசப்படும்..

நாயகன் வருணனுக்கு ப்ராஜெக்ட் அசைன்மென்ட் கொடுக்கும் கேரக்டரை டிவி நடிகை டிடி திவ்யதர்ஷினி செய்து இருக்கிறார்.. லேடி டான் டிடி..

இவர்களுடன் நிறைய புதுமுகங்கள் நடித்திருந்தாலும் எதிர்பாராத வில்லன் வேடத்தில் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.. இவரது கேரக்டரில் டைரக்டர் வைத்த ட்விஸ்ட் எதிர்பாராத சிறப்பம்சமாகும்..

இவர்களுடன் மன்சூர் அலிகான் மற்றும் விசித்திரா இருவரும் ஓரிரு காட்சியில் வந்து படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இணைந்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு சீன்களை அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளனர்.. இவர்கள் பங்களிப்பு படத்தில் பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது..

இசையமைப்பாளர் கார்த்திக்.. கௌதம் படங்களில் ரகஹ்மான் இசை பெரும்பாலும் இருக்கும்.. ஆனால் இதில் ஆக்ஷன் என்பதால் வேறு ஒரு இசையமைப்பாளரை வைத்துவிட்டார் போல..

கெளதம் படம் என்றால் ரொமான்டிக் தான் ஆனாலும் இதில் ஆக்ஷன் வைத்து ஒரு வித்தியாசமான கதை ஓட்டத்துடன் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.. ஃபேவரைட் அமெரிக்காவும் இதில் கொஞ்சம் இடம் பெற்று இருக்கிறது..

முக்கியமாக பீச் வீடு ஃபைட் மற்றும் 12 பேருடன் மோதும் ஃபைட் இரண்டும் ரசிகர்களை அசத்தும் என்பதில் ஐயமில்லை..

ஆக மொத்தம் ஜோஸ்வா.. அல்டிமேட் ஆக்சன்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/3ac5b961-7071-4ff1-a663-2867b5c13e5b-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/3ac5b961-7071-4ff1-a663-2867b5c13e5b-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ரொமான்டிக் படங்களில் பெயர் பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டு ஆக்சன் கதை களத்தில் அதிரடி காட்ட இறங்கி விட்டார்.. வருண் என்பவர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். முதல் 10 நிமிடங்களிலேயே ஹீரோ ஹீரோயின் இருவரும் காதலிப்பதும் பின்னர் இருவரும் பிரிவதும் என கதை ஓட்டத்துடன் திரைக்கதையை தொடங்கிவிட்டார்.. இன்டர்நேஷனல் லெவலில் கூலிப்படையில் வேலை செய்கிறார் நாயகன் ஜோஸ்வா.. ஏதேனும்...