சினிமா செய்திகள்திரை விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

1974 காலகட்டத்தில் வடக்குப்பட்டி கிராமத்தில் நடக்கும் காமெடி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவான படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

கடவுள் இல்லை என்று சொல்லும் வடக்குப்பட்டி ராமசாமி… ஆன்மீகத்தை வைத்து மக்களின் மூடநம்பிக்கைகளை வைத்து பணம் சம்பாதிக்கும் கதை தான் இந்த படம்..

தனக்கு சொந்தமான நிலத்தில் கோயில் ஒன்றைக் கட்டி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார் சந்தானம். இதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் தாசில்தார் தமிழ்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரச்சினை வரவே ‘மெட்ராஸ் ஐ’ என்ற சீசன் வருகிறது இதை வைத்து சாமி குத்தம் என்கிறார் சந்தானம்.

இதன் பிறகு என்ன நடந்தது மக்கள் கடவுளை நம்பினார்களா? மூடநம்பிக்கைகள் என்ன ஆனது? ஆன்மீகவாதியா நாத்திகவாதியா யார் ஜெயித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர்..

நாயகன் சந்தானம் தனக்கு ஏற்ற கலாய்க்கும் கதையை எடுத்து இருக்கிறார்.. ஒன் லைன் கவுண்டர் காமெடிகளை ரசிக்க வைக்கிறார்.. ராமசாமி என்ற பெயரை வைப்பதற்கும் தனி தைரியம் வேண்டும்..

சந்தானத்தின் உதவியாளராக மாறன், கோயில் பூசாரியாக சேஷு இருவரும் காமெடியில் சிக்ஸர் அடித்து இருக்கின்றனர். தாசில்தாராக வரும் தமிழன் தன் கேரக்டரில் வில்லத்தனம் காட்டி இருக்கிறார்.

மேஜர் ஆக நிழல்கள் ரவி நடித்துள்ளார்.. எம் எஸ் பாஸ்கர் இருந்தாலே அந்த கேரக்டரை தன் பங்கிற்கு சிறப்பாக செய்பவர் அவரது கேரக்டரை குறை இல்லை..

மேகா ஆகாஷுக்கு அதிக வேலையில்லை. சந்தானத்திற்கு அட்வைஸ் செய்கிறார்.. செய்து கொன்டே இருக்கிறார்.

எதிரும் புதிருமாக ஜான் விஜய் & ரவி மரியா.. இருவரும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும் மொக்க ஜோக்குகளை போட்டு வெறுப்பேத்துகின்றனர்..

‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. 1970களில் உள்ள கலைநயத்தை அழகாக படம் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமத்திற்கு ஏற்ற பின்னணி இசை கொடுத்திருக்கிறார்..

இயக்குநர் கார்த்திக் யோகி.. அந்தக் காலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய மெட்ராஸ் ஐ என்ற நோயை வைத்து கதை அமைத்திருப்பது இந்த கால குழந்தைகளுக்கு புதுசு.. ஆனால் ஆனால் மக்கள் இப்படி எல்லாமா மூடநம்பிக்கை வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்பது ஒரு கேள்விக்குறி.

ஒரு மேஜர் கேரக்டரை இப்படியா அசிங்கப்படுத்த வேண்டும்?

காமெடி படத்தில் ஏன் லாஜிக் என நினைத்தால் இந்த லாஜிக்கை விட்டு படத்தை ரசிக்கலாம்..

பியூப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இதை தயாரித்துள்ளார்.