டெவில் திரை விமர்சனம்

கணவன் மனைவி உறவில் விரிசல் வரும்போது அதில் இன்னொருத்தன் வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் குடும்பத்தில் ஏற்படும் என்பது தான் படத்தின் கதை கரு..
கணவர் வித்தார்த் தனக்கு செய்த துரோகத்தை எண்ணி வருத்தத்தில் இருக்கிறார் மனைவி பூர்ணா. அப்போது அவரது வாழ்வில் ஒரு புதிய நட்பாக வருகிறார் திரிகுண்.. இவர்களிடையே நெருக்கம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மனம் திருந்திய வித்தார்த் மீண்டும் பூர்ணா வாழ்க்கையில் வருகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? பூர்ணாவின் நிலை என்ன? கணவன் மனைவி உறவின் நிலை என்ன? என்பதுதான் கதை..
விதார்த், பூர்ணா திரிகுண் & சுபாஸ்ரீ
விதார்த், பூர்ணா மற்றும் திரிகுண் ஆகிய மூவரை சுற்றி நகரும் கதை. மூன்று பேருமே இந்த கதைக்கு பலம்.
மிஷ்கின் பட்டறை தனது பள்ளி என்று ஒரு முறை பூர்ணா சொல்லி இருந்தார்.. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்ததொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு மனைவியானவள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயம் என்ன? அது நிறைவேறாமல் போனால் அவளின் மனநிலை என்ன? தவிப்பு என்ன என ஒவ்வொன்றையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. நாயகி இவர்தான் என்றாலும் கதையை தாங்கிப் பிடித்திருக்கும் முக்கிய கேரட்டர் இவரே..
பூர்ணா கணவராக விதார்த்.. ஒரு சராசரி கணவன் வேடம் என்றாலும் அதை அந்த கேரக்டரை சிறப்பு செய்திருக்கிறார்.
மூன்றாவதாக திரிகுண்.. நாயகன் நாயகி இருவருக்கும் போட்டி போடாமலும் அதே சமயம் இருவருக்கும் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் இவர்.
படத்தின் இசை அமைப்பாளர் மிஷ்கின் சின்ன கேரக்டர் நடித்திருக்கிறார்.. ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Director : Aathityaa
Music : Director Mysskin
Producer : R. Radhakrishnan & S. ஹரி
படத்தொகுப்பாளர் இளையராஜா..
ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார்.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.
பாடல்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப கேட்கும் வகையில் கொடுத்திருக்கிறார் மிஸ்கின். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் இரைச்சலை கொடுத்திருக்கிறது..
ஒருவன் நல்லவனாக இருப்பதும் தீயவனாக இருப்பதும் ஒருத்தி நல்லவளாகவே வாழ்வதும் திசை மாறிப்போவதும் சூழ்நிலையைப் பொருத்து அமைகிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆதித்யா..
அதே சமயம் எந்த கேரக்டர் மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படாத வகையில் அதை அழகாகவும் சித்தரித்து இருக்கிறார் வாழ்க்கையில் எது நடந்தாலும் உறவுகள் வேண்டும் என்றால் மறப்போம் மன்னிப்போம் இங்கு யாரும் மகாத்மா இல்லை என்பதை கருத்தாக சொல்லி இருக்கிறார்.
