செய்திகள்திரை விமர்சனம்

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்…

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே பள்ளியில் தோழிகள்.. இவர்களது நட்பை தொடர்ந்து இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக மாறுகின்றனர்..

ஆக மொத்தம் இவர்கள் எல்லாம் ஃபேமிலி பிரண்டாக மாறிவிடுகின்றனர் எனவே இவர்களின் சுதந்திரத்திற்கு அளவில்லை.. சாட்டிங் டேட்டிங் என தங்கள் வாழ்க்கை போக்கை மாற்றுகின்றனர்.. ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் சுற்றுலா செல்கின்றனர்.. இதனால் சில பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது? தோழிகள் பிரிந்தார்களா? பெற்றோர்கள் என்ன செய்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

Sathvik Verma, Nayan Karishma, Surekha Vani, Sriman, Jack Robinson, Amrita Halder, Manjeera, Rajagopal

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்கள் கேரக்டரை நிறைவாக செய்திருக்கின்றனர். ஆனால் இளசு என்பதால் ரவுசு காட்டி நடித்திருக்கிறார்கள்.. முக்கியமாக கவர்ச்சி எல்லை மீறிய வசனங்களும் சீன்களும் அதிகப்படியாக இருக்கின்றன..

வருண் கேரக்டரில் சாத்விக் வர்மா, சிக்கு கேரக்டரில் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் கேரக்டரில் இளைஞர் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மூன்று பெண்களின் பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி ஆகியோர் தங்கள் கேரக்டர்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

Directed By : Muthu

Music By : Balamurali Balu

Produced By : Srinivasan Guru.அ

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் கேமரா பெரும்பாலும் பெண்களின் உடலிலே வைத்து படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.. மார்பு தொப்புள் இடை என சுற்றி சுற்றி கேமராவை வைத்து எடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.

இளம் வயதில் காதல் வருவதும் காமம் வருவதும் இயல்பான ஒன்றுதான்.. இதை மையப்படுத்திய காட்சிகளை வைத்திருக்கிறார் முத்து.. ஆனால் அதிகப்படியான கவர்ச்சி ஆபாசங்களை வைத்துவிட்டு பின்னர் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற தத்துவத்தையும் அவர் காட்சியாக வைத்திருப்பது தான் வருத்தம்.

விவரம் தெரியாத வயதில் விவரமாக இருங்கள் என் அட்வைஸ் செய்திருக்கிறார். அதே சமயம் விவரம் தெரியாதவர்களுக்கு ஓ இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என வியக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் முத்து.