போலீஸ் கான்ஸ்டபிள் நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கிறார். அதன்பிறகே சம்பத் பிரபல ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த சி.பி.ஐ. அதிகாரி என்பதும், பெங்களூர் பயணத்தின் போது விபத்து நடந்ததையும் தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையே, ரவுடி அரவிந்த்சாமியை தேடி வரும் காவல்துறை உயர் அதிகாரி சரத்குமார், அரவிந்த்சாமியையும் சிபிஐ அதிகாரி சம்பத்தையும் கொல்ல முயற்சிக்க… இருவரையும் காப்பாற்றும் நாக சைதன்யா, ‘இது முதலமைச்சர் தொடர்புடைய விவகாரம்’ என்பதை தெரிந்து கொள்வதோடு, சம்பத்தின் முயற்சிக்கு உதவுகிறார். இருவரையும் பெங்களூர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் ரிஸ்க்கான அந்த பயணத்தில் நாக சைதன்யாவின் காதலியும் இணைந்து கொள்ள…
ஒருபுறம் காதல் பிரச்சினை. மற்றொரு புறம் அதிகார வர்க்கம் கொலை செய்ய முயற்சிக்கும் ராஜூவை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். நாக சைதன்யா என்ன செய்தார்? அதிகார வர்க்கத்தை தாண்டி அவரால் பெங்களூர் கோர்ட்டை அடைய முடிந்ததா? என்பது கிளைமாக்ஸ்.
போலீஸ் கான்ஸ்டபிளாக நாக சைதன்யா. காதல் காட்சிகளில் ரசிக்க வைப்பவர், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். அழகான நாயகி கிருத்தி ஷெட்டி காதல் காட்சிகளில் இன்னும் அழகு.

படத்தின் பெரும் பலம் என்றால் அது அரவிந்த்சாமியும் சரத்குமாரும் தான். அதர்மத்துக்கு துணை போகும் காவல்துறை உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிப்பில் மிரட்டுகிறார். அரவிந்த்சாமி வில்லன் என்றாலும் அவ்வப்போது அடிக்கும் கமெண்டுகளால் திரையரங்கை கலகலப்பாக வைத்திருக்கிறார். தன் பெயரை அவர் ராஜூ என உச்சரிப்பதே தனிஅழகு.

கேமியோ ரோல் செய்திருக்கும் ராம்கிக்கு ‘ஏஜெண்ட் பிலிப்’ என்று ‘விக்ரம்’ படத்தை ஸ்பூஃப் செய்து வைத்திருக்கும் காட்சி தியேட்டரை ரகளைப்படுத்தி வைக்கிறது. ஜீவா-ஆனந்தி சம்பந்தப்பட்ட அந்த பிளாஷ்பேக் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

முதலமைச்சராக வரும் பிரியாமணி தனது பெரியப்பா ஒய்.ஜி.மகேந்திரனை சந்திக்க வரும் இடத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அடடா ரகம். காமெடி மாப்பிள்ளையாக பிரேம்ஜி தன் பங்குக்கு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், பாடல்கள் காதுகளைச் சேராமல் போனது சோகம். தமிழ்ப் படமாகவும் இல்லாமல் தெலுங்குப் படமாகவும் இல்லாமல் வெங்கட்பிரபு தந்திருக்கும் இந்த கஸ்டடி, அதிரடி ஆக்–ஷன் புண்ணியத்தில் கரையேறி விடுகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/b1612962957cae634919089e7d7a501c.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/b1612962957cae634919089e7d7a501c-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்போலீஸ் கான்ஸ்டபிள் நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கிறார். அதன்பிறகே சம்பத் பிரபல ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த சி.பி.ஐ. அதிகாரி என்பதும், பெங்களூர் பயணத்தின் போது விபத்து நடந்ததையும் தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே, ரவுடி அரவிந்த்சாமியை தேடி வரும் காவல்துறை உயர் அதிகாரி சரத்குமார், அரவிந்த்சாமியையும்...