சாதி மோதல்களுக்குக் குறைவில்லாத தென்தமிழகத்தில் அது மட்டும் தான் பிரச்சினையா என்றால், இல்லை, அதற்குள் அரசியலும் இருக்கிறது என்கிறது, கதை.
ராமநாதபுர கிராமத்தில் உயிர் நண்பர்கள் பிரபு-இளவரசு. இவர்களில் கீழத்தெரு பிரபு ஒரு சாதியை சேர்ந்தவர். இன்னொரு சாதியை சேர்ந்்த அவரது நண்பர் இளவரசு மேலத்தெருவை சேர்ந்தவர். ஒருவரை மற்றவர் எதிரியாக நினைத்து வாழும் இரண்டு சாதிகளுக்குள்ளும் எந்தவித மோதலும் வந்து விடக்கூடாது என்பதிலும் தங்கள் நட்பிலும் பிரபு கவனமாக இருக்க…
பிரபு-இளவரசுவின் நட்பு போலவே பிரபுவின் உறவுக்கார சாந்தனுவும், இளவரசின் மகனும் இணைபிரியாத நண்பர்கள். இ்ந்த இளைய கூட்டணி ஊரைக் காக்கும் பிரபுவின் இரு கரங்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த ஒற்றுமை அந்த ஊர் அரசியல்வாதி அருள்தாசின் கண்ணை உறுத்த…அதற்கான தருணம் பார்த்்து காத்திருக்கிறார்.
இந்நிலையில் ஊர் திருவிழாவுக்காக சாந்தனுவின் முறைப் பெண்ணான ஆனந்தி தன் தாயுடன் அந்த ஊருக்கு வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் சாந்தனு-ஆனந்தி காதல் பிடிக்காத ஆனந்தியின் தாய் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு்ப் போய் வெளியூரில் செட்டிலானார். 5 வருட இடைவெளி பழைய விஷயத்தை மறக்கடித்திருக்கும் என்ற நினைப்பில் திருவிழாவுக்கு வருகிறார்.
அந்த பழைய காதலை பகடைக்காயாக வைத்து ஒற்றுமையுடன் இருக்கும் நண்பர்களுக்குள் பகைமையை ஏற்படுத்தி அந்த ஊரை இரண்டு படுத்த முடிவு செய்யும் அருள்தாஸ், தனது பிரிவினை அஸ்திரத்தை பயன்படுத்துகிறார். அதை பிரபுவால் எதிர்த்து வெல்ல முடிந்ததா? இதில் சாந்தனுவின் பங்கு என்ன? என்பதெல்லாம் மீதிக் கதை.

கதையின் நாயகனாக வரும் சாந்தனு கதையைத் தாங்கிச் செல்லும் நாயகனாக நடித்திருக்கிறார். ஆக்–ஷன் காட்சிகளில் பொளந்து கட்டுகிறார். ஆனந்தியுடனான அந்தகாதல் ‘பிரஷ்’ ரகம்.

படம் முழுவதும் வரும் ஆனந்திக்கு சாந்தனுவை காதலிப்பதை தவிர பெரிதாக வேறு வேலை எதுவும் இல்லை.

ஊருக்குக் காவல் தெய்வம் போல் வருகிறார் பிரபு. பெயருக்கு மட்டும் என்று இல்லாமல் இளவரசுவை தன் உயிரில் பாதியாகவே அவர் நடத்துவதும், அவரது மகன் சஞ்சய்யை தன் சொந்த பிள்ளை போலே பாவிப்பதிலும் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார், பிரபு.
சாந்தனுவின் அக்காவாக வரும் தீபா சங்கரும், ஆனந்தியின் அம்மாவாக வரும் சுஜாதா சிவகுமாரும், இயல்பான கிராமத்து அம்மாக்களாக வலம் வருகிறார்கள்.
அமைச்சராக வரும் பி.எல்.தேனப்பன் தன் வழக்கப்படி வில்லத்தனம் புரிகிறார். அருள்தாசும் தன் பங்கக்கு ஸ்கோர் செய்கிறார்.
அருள்தாசின் சதி பின்னணிக்கு சூத்ரதாரியாக வரும் அந்த ஒத்தக் கை நடிகர் இன்னொரு நடிப்பு அட்டகாசம்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் படத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கின்றன. குறிப்பாக அந்த ‘அத்தனைபேர் மத்தியிலே’ பாடல் ரசிக்க வைக்கிறது.

விக்ரம் சுகுமாறன் இயக்கி இருக்கிறார். ராமநாதபுர தண்ணீர் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் வியாபாரத்தை பற்றிய வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.
அதே சமயம், சாதி பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக வாழும் கிராமமாக இருந்தாலும், மேலத்தெருமக்களின் தலைவரின் புகழ்பாடும் விதமான காட்சிகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. அதிலும், “நாங்க கொடுத்த உயிரை நாங்களே எப்படி எடுப்பது என்று தான் யோசிக்கிறோம்”, “உங்களுக்கு சோறு போட்டு, இருக்க இடம் கொடுத்து மனுஷனாக்கியது நாங்க தான்” உள்ளிட்ட பல வசனங்கள் கீழத்தெரு மக்களை மட்டம் தட்டும் விதமாக இருப்பதோடு சாதி வன்மத்தின் உச்சமும் கூட.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/images-2023-05-08T193242.874.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/images-2023-05-08T193242.874-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்சாதி மோதல்களுக்குக் குறைவில்லாத தென்தமிழகத்தில் அது மட்டும் தான் பிரச்சினையா என்றால், இல்லை, அதற்குள் அரசியலும் இருக்கிறது என்கிறது, கதை. ராமநாதபுர கிராமத்தில் உயிர் நண்பர்கள் பிரபு-இளவரசு. இவர்களில் கீழத்தெரு பிரபு ஒரு சாதியை சேர்ந்தவர். இன்னொரு சாதியை சேர்ந்்த அவரது நண்பர் இளவரசு மேலத்தெருவை சேர்ந்தவர். ஒருவரை மற்றவர் எதிரியாக நினைத்து வாழும் இரண்டு சாதிகளுக்குள்ளும் எந்தவித மோதலும் வந்து விடக்கூடாது என்பதிலும் தங்கள் நட்பிலும் பிரபு கவனமாக...